பாதுகாப்புப் பணி நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத்தலைவரை டிப்பர் வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், குருநகர் கனகசிங்கம் வீதியைச் சேர்ந்த எம்.லக்கி (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், நிறுவன பாதுகாப்புக் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து சாகவச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாகவச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.