வெல்லவாயா, சிரிபுர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் வெல்லவாய எத்திலிவெவ மீனஸ் ஆராவ பிரதேசத்தைச் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.