இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது

Published By: Rajeeban

13 Nov, 2019 | 10:44 PM
image

அலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு

தமிழில் - ரஜீபன்

இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில்  நிற்பவராக பரவலாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார்.

அக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசமைப்பு தடை செய்துள்ளதால் கோத்தாபய தனது சகோதரரை  பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இறுதியாக ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகளவிற்கு ஏதேச்சதிகார தன்மை கொண்டதாக காணப்பட்டது.

அந்த குடும்பத்தின் அரசியல் எழுச்சி மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தவுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் முக்கிய போட்டியாளராக சஜித்பிரேமதாச காணப்படுகின்றார்-தற்போதைய பிரதமரை விட சாதாரண மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாச பிரபலமானவராக காணப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட கருத்துக்கணிப்புகளும், அதிகளவிற்கு ராஜபக்ச சார்பானதாக காணப்படும்  தனியார் ஊடகங்களும்,கடந்த கால வாக்களிப்பு முறைகளும்,-

இதுவரை வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாச ராஜபக்ச எதிர்ப்பு வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவானவற்றை கைப்பற்ற கூடிய சிறிய கட்சிகளையும் எதிர்கொள்கின்றார்.

கடந்த உயிர்த்தஞாயிறு தினத்தன்று  இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக .பெரும்பான்மை சிங்களவர்களை கவர்வதற்காக கோத்தாபய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட வாக்குறுதிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில நாட்களிலேயே அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்பதை அறிவித்தார்.இதன் மூலம் தேசத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரிப்பதற்கான வாய்ப்பை அவர் கைப்பற்றிக்கொண்டார்.

அனைத்து வகையான பயங்கரவாதங்களையும்  ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ள அவர் ஆள்கடத்தல் ,கொலை குற்றச்சாட்டில் அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைதுசெய்தமையே பாதுகாப்பை பலவீனப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது என ( ஆதாரமின்றி) தெரிவிக்கின்றார்.

2009 இல்,இலங்கையின் வடகிழக்கில் தமிழர் தாயகத்திற்காக போராடிய பிரிவினைவாத போராளி அமைப்பான விடுதலைப்புலிகளிற்கு எதிராக பெற்றவெற்றியில் பாதுகாப்பு செயலாளர் என்ற தனது பங்களிப்பை கோத்தாபய அதிகமாக வலியுறுத்துகின்றார்.

கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளை மையமாக கொண்ட இராணுவபாணியிலான -அரசியல்வாதிகளிற்கு பதில் தொழில்சார் வல்லுனர்கள் தலைமை தாங்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

நகரஅபிவிருத்தி அதிகார சபையின் தவைராகயிருந்தவேளை அவர் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களிற்காக கோத்தபாய ராஜபக்ச நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகளையும் பெறக்கூடியவராக காணப்படுகின்றார்.

சிலவேளைகளில் ஈவிரக்கமற்ற விதத்தில் வேலையை முடிப்பார் என்ற உணர்வும் காணப்படுகின்றது.

தனது அரசாங்கம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ள கோத்தாபய தனிப்பட்ட உரிமைகளை விட தேசப்பற்றே முக்கியமானது,பாதுகாப்பு மிக முக்கியமானது என ஆக்ரோசமாக வாதாடியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச ஆட்சி குறித்து அச்சம்

கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கான வாய்ப்புகள் இனரீதியிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதுடன் சிறுபான்மையினத்தவர்கள் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மத்தியில்  அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

உறுதியான சிங்கள தேசியவாதியான கோத்தாபாயவை தெரிவு செய்வது இலங்கையின் இனங்கள் மத்தியில் ஏற்கனவே காணப்படும் பாரதூரமான பிரிவினைகளை இன்னமும் ஆழமாக்கிவிடும், கடந்த சில வருடங்களில் பெறப்பட்ட ஜனநாயக பலாபலன்களை  அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் கருதுகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் பொறுப்பாகயிருந்தவேளை முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட  பௌத்த குழுக்களிற்கான அவரின்  ஆதரவு குறித்தும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

2018- மற்றும 2019 இ;ல் முஸ்லீம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளிற்கு கோத்தாபயவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்பட்டது என்பதற்கான  ஆதரங்களும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன.

முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் முக்கிய தேசியவாத மதகுருக்களின் ஆதரவு கோத்தாபய ராஜபக்சவிற்கு உள்ளமையும் இந்த அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

கோத்தாபய தீவிரவாத தன்மை கொண்ட பௌத்தர்களுடன் தனக்கு தொடர்புள்ளதை நிராகரித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் உள்ள ஏனையவர்களுடன் இணைந்து முஸ்லீம் வாக்குகளை பெற முயன்றுள்ளார்.

வர்த்தகர்களிற்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில முஸ்லீம் வர்த்தகர்கள் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்ற போதிலும்,முஸ்லீம்கள் தங்கள் பாரம்பரிய ஆதரவை ஐக்கியதேசிய கட்சிக்கே வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

எனினும் இதன் காரணமாக கோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர்.

கோத்தாபய வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தோல்வியடையும்.

ராஜபக்சாவின் கண்காணிப்பின் கீழ் யுத்தத்தின் இறுதி வருடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனர்கள்.இவர்களில் மே 2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பின்னர் ஒருபோதும் மீண்டும் காணப்படாதவர்களும் உள்ளனர்.

ஒக்டோர்பர் 15 ம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காணாமல்போனவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பபட்டவேளை சரணடைந்தபின்னர் எவரும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்தார்.இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பபட்டவேளை கடந்த காலங்கள் குறித்து கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை என்றார்.

குறிப்பாக தமிழர்களிற்கும்- பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கும் மறக்குமாறு கோரப்படுவது வேதனையை அளிப்பதாகவும் -சாத்தியமற்றதாகவும் உள்ளது.

தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளமையும்,காணாமல்போனவர்கள் குறித்து இராணுவத்தினை பதிலளிக்குமாறு  கேட்கத்தவறியுள்ளமையும் காயங்களை மாறாமல் வைத்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இன்னமும் வலுவானதாக மாறமுடியாமல் திணறுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கோத்தாபய இந்த அலுவலகத்தை கலைத்துவிடுவார் என பலர் கருதுகின்றனர்.

சஜித் பிரேமதாச

சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால், இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை.

அவரது தேர்தல் விஞ்ஞாபனம் சில சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது- சுயாதீன விசாரணை அதிகாரியை உருவாக்குவது குறித்து அவர் குறிப்பிடுகின்றார்.

ஆனால் சஜித்பிரேமதாசவின் அரசியல் வாழ்க்கை அவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீவிர அர்ப்பணிப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாகயில்லை.

அவர் வீடமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் அவர் வறிய நடுத்தர இலங்கையர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வுமே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு காரணமாக உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கோத்தாபயவிற்கு சமமாக பயங்கரவாதத்தை ஒழிப்பது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலைப்பாடு குறித்தும்- ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் குறித்த பலத்த ஏமாற்றம் சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாய செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவுகின்ற போதிலும் அவர்கள் இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும மாற்றுக்கருத்திற்கு காணப்படும் சிறிய தளத்தை தக்கவைப்பதற்கு பிரேமதாச வெற்றிபெறுவது அவசியம் என கருதுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04