வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பாடசாலையில் சில மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டது. இதன் பிரகாரம் சுகாதார திணைக்களத்தினால் பாடசாலை சூழல் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையில் பாடசாலையில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் சுகாதார பகுதியினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே அவற்றை சுத்தம் செய்து குறித்த சூழலை டெங்கற்ற பிரதேசமாக மாற்ற சுகாதார செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகல் நாளை மட்டும் பாடசாலையை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண மட்டத்தில் இடம்பெறும் சாதாரணதர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் வவுனியா சைவப்பிரகார மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபங்களில் தோற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.