டோக்கியோ, ஸ்கைமார்க் நிறுவனத்தினால் இயக்கப்படும் போயிங் 737 என்ற விமானம் ஜப்பானின் ஃபுகுயோகா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் கியோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஃபுகுயோகா விமான நிலையத்தில் ஒகினாவாவுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரம் செயலிழந்தமையின் காரணமாக குறித்த விமானம் இவ்வாறு அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது விமானத்தில் மொத்தம் 139 பயணிகளும் பணியாளர்களும் இருந்துள்ளதாகவும், எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கியோடோ செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.