பொலன்னறுவை புராதன தொழில்நுட்ப நூதானசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்தார்.

புதிய யுகத்திற்கேற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன் தொடர்புடைய தொல்லியல் பொறுமதிவாய்ந்த பொருட்களை சேகரித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நூதனசாலை ஜனாதிபதி அவர்களால் கடந்த ஜூலை மாதம் 03 திகதி திறந்துவைக்கப்பட்டது.

நூதனசாலையின் விசேட பிரிவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையானது, ஜனாதிபதியினால் நேற்று திறந்துவைக்கப்பட்டதுடன், இப்பிரிவில் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் புரிந்த அரச தலைவர்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரது பதவி காலத்தில் வெளிநாட்டு அரச தலைவர்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புகள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை தேசிய நூதனசாலைகள் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், அப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பகுதியையும் மக்களின் பார்வைக்காக ஜனாதிபதியினால் நேற்ற திறந்துவைக்கப்பட்டது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் வேலைத்திட்டமான பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலையின் உறுதிப்பத்திரத்தை நூதனசாலைகள் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஆவணங்களையும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் நூதனசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனுஜா கஸ்துரிஆரச்சியிடம் கையளித்தார்.

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.