லண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.

முன்னணி 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டென்னிஸ் சம்பியன்ஷிப் ஆண்களுக்கான போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 

இதில் ‘போர்க்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் நேற்று நடந்த ஆட்டத்தில் 7-6 (7-2), 6-3 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீரர் பெரேட்டினியை தோற்கடித்தார். 

இந்த வெற்றியின் மூலம் பெடரர் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். 

தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட பெடரர் கடைசி லீக்கில் 2 ஆம் நிலை வீரர் நோவக் செர்பிய வீரர் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு ‘அகாசி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் (ஜெர்மனி) வீழ்ந்தார்.