மக்கள் விடு­தலை  முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி  அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.  காரணம் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னதும் எமதும் பொரு­ளா­தார கொள்­கைகள் கிட்­டத்­தட்ட ஒரு­மித்­த­தா­கவே உள்­ளன என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

வீரகேசரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே  அவர் இதனை குறிப்­பிட்டார்.  செவ்­வியின் விபரம் வரு­மாறு,

உங்கள் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றி­வாய்ப்பு எவ்­வாறுள்­ளது?

பதில்: எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நாடு முழு­வதும் பாரிய பிர­சாரப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.   நாங்கள் வீடு வீடாக சென்று மக்­களை தெளிவு­ப­டுத்­தினோம்.  அத்­துடன்  ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச  அனைத்து தொகு­தி­க­ளுக்கும் சென்று  பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்டார். மக்­களை  சிறந்த முறையில்  தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.  மக்­களும் சிறந்த முறையில் தெளிவ­டைந்­துள்­ளனர்.  

எனவே  மிகவும் வெற்­றி­க­ர­மான பிர­சாரப் பணிகள் நிறை­வுக்கு வரு­கின்­றன. நாங்கள் சிறந்த முறையில் பிர­சாரப் பணி­களை முன்­னெ­டுத்தோம்.  

அந்­த­ வ­கையில்  சஜித் பிரே­ம­தாச,  இந்த ஜனா­தி­பதித்  தேர்­தலில்  ஒரு சிறப்­பான வெற்­றியை பெறுவார். அவரின் வெற்றி உறு­தி­யா­கி­யுள்­ளது.

வேட்பாளர் சஜித் பிரேமதாச  நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை நடத்தி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அந்த முயற்சி வெற்றியடைந்திருக்கின்றது. மக்கள்  தெளிவடைந்திருக்கின்றார்கள்.

அதனடிப்படையில் 16 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவை சிறந்த முறையில் வெற்றியடைய  செய்வார்கள்.

வடக்கு கிழக்கில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கான ஆத­ரவு எவ்­வாறுள்­ளது?

பதில்:  வடக்கு கிழக்கு மக்கள் எப்­ப­டியும் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்­குத்தான் வாக்­க­ளிப்­பார்கள். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை.  வடக்கு கிழக்கு மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளிக்க தீர்­மா­னித்­து­விட்­டார்கள். எந்­த­வ­கை­யிலும்   அந்த மக்கள் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­க­ மாட்­டார்கள். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு வாக்­க­ளித்து கஷ்­டத்தில் விழு­வ­தற்கு  வடக்கு கிழக்கு மக்கள் தயா­ரில்லை.  எனவே வடக்கு கிழக்கு  பகு­தி­களில் சஜித் பிரே­ம­தாச,   அதி­க­ள­வி­லான வாக்­கு­களை பெற்று வெற்­றி­யீட்­டுவார். காரணம்  இந்த நாட்டில் அனைத்து இன மக்­க­ளையும் அனைத்து மதத்­தி­ன­ரையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டிய ஒரே தலைவர் சஜித் பிரே­ம­தாச என்­பது நாட்டு மக்­க­ளுக்கு தெரியும். அந்த விடயம்  வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.  எனவே வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்   சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அமோக ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வது நிச்­ச­ய­மாகும்.

வடக்கு கிழக்கிலும் சிறந்த முறையில் பிரசாரக்கூட்டங்களை நடத்தி மக்களுக்கு நாங்கள் உரையாற்றியிருக்கின்றோம். மக்கள் சஜித் பிரேமதாசவை நன்கு அறிந்திருக்கின்றனர். எனவே சஜித் பிரேமதாச வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் வெற்றியீட்டுவார்.

ஒரு அர­சியல் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­ச­விடம் நீங்கள் காணும் விசேட அடை­யாளம் என்ன?

பதில்: பல விட­யங்கள் உள்­ளன.  முத­லா­வ­தாக சஜித் பிரே­ம­தா­சவின்  அர்ப்­ப­ணிப்பை கூறலாம்.  பாரிய அர்ப்­ப­ணிப்­புடன் அவர் செயற்­பட்­டு­ வ­ரு­கின்றார்.  தலை­வ­ருக்கு  மிக முக்­கி­ய­மான ஒன்­றாக அது காணப்­ப­டு­கின்­றது.   இரண்­டா­வ­தாக அவ­ரிடம் நேர்மை  இருக்­கின்­றது. அவரின்  நேர்­மைத்­தன்­மையும்  முக்­கி­ய­மா­னது. அர­சியல்  தலை­வர்கள் எப்­போதும் நேர்­மை­யா­ன­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். அது   சஜித் பிரே­ம­தா­ச­விடம் இருக்­கின்­றது.  மூன்­றா­வ­தாக  அவரின்  கொள்­கைகள், திட்­டங்­களை குறிப்­பி­டலாம். பொது  மக்கள் குறித்து சிந்­திக்கும்  மக்­களை  பலப்­ப­டுத்த முயற்­சிக்கும்  நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்கும் அவரின்   திட்­டங்கள், கொள்­கைகள் மிகவும் முக்­கி­ய­மா­னவை­யாகும்.   குறிப்­பாக வறு­மையில் உள்ள மக்­களை  மீட்­டெ­டுத்து அவர்­களை பொரு­ளா­தார ரீதியில் வலுப்­ப­டுத்தும் திட்­டங்கள்    சஜித்­திடம் உள்­ளன.

மிக முக்கியமாக மக்களின் கஷ்டங்களை அவர்களின் தேவைகளை அறிந்தவராக எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச காணப்படுகின்றார். அவ்வாறான ஒரு தலைவர் நாட்டை ஆள்வது சிறந்ததாக இருக்கும். பொது மக்களின் நெருங்கியவராக சஜித் பிரேமதாச இருக்கின்றார்.

சஜித் வென்றால் அவரின் அர­சாங்­கத்தில் முதன்­மைப்­ப­டுத்­தப்­படும் விட­யங்கள் என்ன?

பதில்: அதிக விட­யங்கள் உள்­ளன. எனினும், பிர­தா­ன­மாக   நாட்டில் காணப்­படும் ஊழல் ஒழிக்­கப்­படும்.   மக்­களின்  தேசிய பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­படும்.  ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­படும். ஊடக சுதந்­திரம் நிலை­நாட்­டப்­படும்.  வறு­மை­ஒ­ழிப்பு, அபி­வி­ருத்தி என பல விட­யங்கள் உள்­ளன.

மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமை உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்.  இவ்வாறு பல வேலைத்திட்டங்களை முதன்மை அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் அரசாங்கம் முன்னெடுக்கும்.

நாட்டின்  70 வரு­ட­கால தமி­ழர்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண சஜித் என்ன செய்வார்?

பதில்: சஜித் பிரே­ம­தாச தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெ ளியிட்­டுள்ளார். அந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­துக்கு அமை­வாக அவர் இந்த விட­யத்தை அணு­குவார். அதா­வது, இந்த விடயம் எவ்­வாறு தீர்க்­கப்­படும் என்று தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதோ அந்த வகையில்   இந்த பிரச்­சினை அணு­கப்­படும். அதனை சஜித் பிரே­ம­தாச  சரி­யாக முன்­னெ­டுப்பார்.

சஜித் வென்­றதும் பிர­தமர் பத­வியில் மாற்றம் வருமா?

பதில்: அது தொடர்பில் என்னால் எதுவும் கூற முடி­யாது. ஆனால் அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­ற­வாறு அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சஜித் பிரே­ம­தாச அது  தொடர்பில் ஏற்­க­னவே கூறி­யுள்ளார். இந்த விடயம்  தெளி­வா­னது. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பல­முள்ள ஒருவர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்.  

சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உங்கள் தரப்­புக்கு ஆத­ர­வ­ளிப்­பது தொடர்பில்?

பதில்: முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா எங்கள் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அவ­ருக்கு ஆத­ர­வா­ளர்கள் உள்­ளனர். அந்த ஆத­ரவு தற்­போது  எமது வேட்­பா­ள­ருக்கு கிடைப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. சந்­தி­ரிகா குமா­ர­துங்க எமக்கு ஆத­ரவு வழ­ங்க முன்­வந்­தமை  தீர்க்­க­மான ஒரு விட­ய­மாகும்.  

இம்­முறை தனித்து போட்­டி­யிடும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலை எவ்­வாறுள்­ளது?

பதில்: மக்கள் விடு­தலை முன்­னணி இம்­முறை ஜனா­தி­பதித்  தேர்­தலில் தனித்து போட்­டி­யி­டு­கின்­றது.  அந்த கட்­சிக்கும் மக்கள் மத்­தியில் குறிப்­பிட்­ட­ளவு ஆதரவு உள்ளது. அவர்களும் மக்களை கவர்ந்து வருகின்றனர்.  குறிப்பிட்ட ஒரு தொகை வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.  

அதாவது மக்கள் விடுதலை  முன்னணியின் கொள்கையை விரும்பி  அந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மக்கள், சஜித் பிரேமதாசவுக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம்.  காரணம் மக்கள் விடுதலை முன்னணியினதும் எமதும் பொருளாதார கொள்கைகள் கிட்டத்தட்ட ஒருமித்ததாகவே உள்ளன. எனவே அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்கும்  மக்கள் அதில் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு விருப்பு வாக்கை அளிக்கலாம்.  அந்த மக்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகின்றோம்.