சஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா

13 Nov, 2019 | 01:21 PM
image

சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வவு­னியா மாவட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைப்­பாளர் கரு­ணா­தா­சவின் ஏற்­பாட்டில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

குறித்த கூட்­டத்தில் சஜித் பிரே­ம­தா­சவின் சகோ­தரி துலாஞ்­சலி பிரே­ம­தாச, முன்னாள் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் ரோகித போகொல்­லா­கம உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர். இதில் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

கடந்த காலங்­களில் எங்­க­ளுக்கு நடை­பெற்ற அநீ­திகள், துன்­பங்கள் எல்லாம் உங்­க­ளுக்கு தெரியும். அதி­லி­ருந்து விடு­தலை பெற வேண்டும். கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக நாங்கள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அதற்கும் அப்பால் இன்று சஜித் பிரே­ம­தாச தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அவ­ரு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தா­சவின் ஆட்­சியில் வடக்கு–- கிழக்கு பிர­தே­சத்தில் வாழும் பெண்­களின் வாழ்­வா­தா­ரத்­துக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

சுயா­தீன ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்றார். போரால் பாதிக்­கப்­பட்ட, கண­வனால் கைவி­டப்­பட்ட பெண்கள் இருக்­கின்­றார்கள். பட்­ட­தா­ரிகள் தொடக்கம் இன்று வேலை­யில்­லாமல் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கானக கைத்­தொழில் பேட்­டை­களை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. நாட­ளா­விய ரீதியில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பின்னர் இவை­களை அவர் நிறை­வேற்றித் தருவார்.

இந்­த­முறை  ஜனா­தி­பதி ஆனதன் பின்னர் தொடர்ந்து 20 வரு­டங்கள் பய­ணிக்க இருக்­கின்றோம். கடந்த காலத்தில் ஏற்­பட்ட அநீ­தி­களை முள்­ளி­வாய்க்கால் கூறு­கின்­றது. முள்­ளி­வாய்க்கால் போன்ற கொடூ­ர­மான வாழ்க்­கையை நாம் கடந்த காலத்தில் வாழ்ந்­தி­ருக்­கின்றோம். அப்­ப­டி­யா­ன­வற்­றுக்கு நாம் இட­ம­ளிக்க கூடாது. வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் ஒவ்­வொரு குடும்­பமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இறுதி யுத்­தத்தால் மாற்றுத் திற­னா­ளிகள், பெண்­களை தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்கள் எனப் பலர் இருக்­கின்­றனர். குழந்­தைகள் பெற்­றோர்­களை இழந்திருக்­கி­றார்கள். பிள்­ளை­களை இழந்து முதி­யோர்கள் முதியோர் இல்­லங்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவைகள் எல்லாம் உங்­க­ளுக்கு ஞாப­கத்துக்கு வர­வேண்டும்.

குறு­கிய காலத்தில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்தில் ஒரு இலட்சம் வரை­யி­லான சமுர்த்தி பய­னா­ளர்­களை தெரிவு செய்­துள்­ளது. உட்­கட்­ட­மைப்பு மற்றும் வீதிகள் புன­ர­மைத்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கம்­ப­ர­லிய திட்­டத்தின் ஊடாக ஒரு தொகு­திக்கு 300 மில்­லியன் ரூபாய் நிதி ஒதுக்­கப்­பட்டு ஆல­யங்கள், பாட­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், சிறு­வீ­திகள் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளன.

வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்ட குடும்­பங்­களின் மின்­னி­ணைப்­புக்­காக ஒரு குடும்­பத்துக்கு 30 ஆயிரம் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண சர்­வ­தேச விமான நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சஜித் பிரே­ம­தாச கிரா­மங்கள் தோறும் சென்று தனது அமைச்சின் ஊடாக குடி­யேற்­றத்­திட்­டங்­களை அமைத்து வீடு­களை வழங்­கி­யுள்ளார்.

எனவே குறு­கிய காலத்தில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்தி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி இந்த நாட்டை ஒரு ஜன­நா­யக நாடாக கொண்டு வந்­தி­ருக்­கின்றோம். இந்த வாக்­கு­களின் ஊடாக ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த முடியும். ஜன­நா­யக நாடு தான் எங்­க­ளுக்கு வேண்டும். வெள்­ளை வான் கலா­சாரம் வேண்டாம். எங்களுடைய காணிகள் வேண்டும். சிறையில் இருந்து அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம். மிகுதி கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்­படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத் துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:39:23
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12