சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டால் இந்த நாட்டில் சமூ­கங்­ க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் ஒரு ஜனா­தி­ப­தி­யாக திகழ்வார் என ஆரம்பக் கைத்­தொழில் மற்றும் சமூக வலு­வூட்டல் இராஜங்க அமைச்சர் அலி­சாஹிர் மௌலானா தெரி­வித்தார்.

வீரகேசரிக்கு அவர் வழங்­கிய விசேட நேர்­கா­ணலின் போதே அவர் மேற் கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இச்சந்திப்பில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

கேள்வி: சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­ப­தற்­கான காரணம் என்ன?

பதில்: ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­க­ளுக்குள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்டி நில­வு­கின்­றது. அதில் நாம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்­கின்றோம். சஜித் பிரே­ம­தாச சிறு­பான்மை சமூ­கங்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்­கின்ற ஒரு­வ­ராக காணப்­ப­டு­கின்றார். தமிழ், முஸ்லிம், கிறிஸ்­த­வர்கள் என சிறு­பான்மை சமூ­கங்­களின் அபி­லா­சைகள் அவர்­களின் பாது­காப்பு இவை­களை கருத்திற் கொண்டு செயற்­ப­டு­ப­வ­ராக காணப்­ப­டு­கின்றார். அத­னால்தான் சிறு­பான்மை சமூகம் ஒன்­று­பட்டு சஜித் பிரே­ம­தா­சாவை ஆத­ரிக்­கின்­றது.

கேள்வி: சமூக நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க சஜித் பிரே­ம­தாச எவ்­வ­கை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்பார்?

பதில்: சமூக நல்­லி­ணக்­கத்­துக்­காக சமூக ஒற்­று­மைக்­காக சமூ­கங்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்காக நாம் பாடு­பட்டு வரு­கின்றோம் என சஜித்­பி­ரே­ம­தாச அடிக்­கடி அவ­ருடைய ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­களில் கூட்­டங்­களில் கூறி வரு­வ­துடன் அந்த வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் அவ­ரது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் விளக்கி கூறி­யுள்ளார். இதனை மட்­டக்­க­ளப்பில் வைத்தும் அவர் தெரி­வித்தார். நாங்கள் சமூக நல்­லி­ணக்­கத்­துக்­காக சமூக ஒற்­று­மைக்­காக சமூ­கங்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கத் தான் நாம் பாடு­பாட்டு வரு­கின் றோம். எதிர் காலத்தில் அனை­வ­ரையும் ஒரு தாய் மக்­க­ளாக ஒரே குடை யின் கீழ் வாழச் செய்யும் அமைப்­பையும் ஏற்­ப­டுத்தப் போவ­தாக அவர் கூறு­கின்றார்;.

கேள்வி: நீங்கள் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் மட்­டக்­க­ளப்பு தொகு­திக்கு சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெற்று ஜனா­தி­ப­தி­யானால் எவ்­வ­கை­யான அபி­வி­ருத்தி வேலை­களை மேற்கொள்வார்?

பதில்: மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு சுத்­த­மான குடிநீர் இல்­லாத பிரச்­சினை இருக்­கின்­றது. உன்­னிச்சை நீர் திட்­டத்­தினை அபி­வி­ருத்தி செய்து அவர் ஜனா­தி­ப­தி­யா­னதும் முதலில் ஆரம்­பிக்கும் நீர் திட்­ட­மாக உன்­னிச்சை நீர் திட்டம் அமைந்­தி­ருக்கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ள­துடன் அதன் மூல­மாக அனை­வருக்கும் சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­படும் என்­ப­தையும் சஜித் பிரே­ம­தாச கூறி­யுள்ளார்.

அதேபோன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணி­யில்­லா­த­வர்­க­ளுக்கு காணி­களை வழங்­கு­வது மாத்­தி­ர­மல்ல. அந்தக் காணி­களில் வீடு­களை அமைத்துக் கொடுத்து அந்த வீட்­டுக்கு தேவை­யான குடிநீர் வசதி, மின்­சார வசதி அனைத்­தையும் செய்து தந்து குடும்ப வாழ்வை மிகவும் சிறந்த முறையில் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­படும்.

இந்தப் பிர­தே­சத்­தி­லி­ருக்­கின்ற றூகம் குளம் உட்­பட அனைத்து குளங்­க­ளையும் அபி­வி­ருத்தி செய்து நீர்ப்­பா­சனத் திட்­டத்­தினை விரி­வு­ப­டுத்தி குறிப்­பாக அனைத்து விவ­சா­யி­க­ளுக்கு நீரினை வழங்கி விவ­சா­யம் அபி­வி­ருத்தி செய்­யப்­படும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணப்­படும் அடிப்­படை வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­துடன் இங்­குள்ள வீதி­களை புன­ர­மைப்பு செய்­வ­துடன் பாலங்­களும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.

மட்­டக்­க­ளப்பு வெபர் மைதா­னத்தை சர்­வ­தேச மைதா­ன­மாக மாற்­று­வ­தற்கு முயற்­சி­களை எடுப்­ப­துடன் மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்­தினை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் மேற்கொள்­ளப்­படும்.

சுற்­று­லாத்­து­றையை விருத்தி செய்து சுற்­று­லாப்­ப­ய­ணி­களை அதி­க­ளவில் இங்குவரச் செய்­வ­தற்­கான வழி­வ­கைகள் மேற் கொள்­ளப்­ப­டு­வ­து­டன் ­இவ்­வாறு அபி­வி­ருத்­தியில் புதிய புரட்­சி­களை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நாம் ஏற்­ப­டுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச திட்­ட­மிட்­டுள்ளார்.

கல்­லடி வாவியை தோண்டி அபி­வி­ருத்தி செய்து விவ­சா­யி­க­ளுக்கு தேவை­யான சிறந்த முறை­யி­லான நீரைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வச­தி­களும் மேற்கொள்­ளப்­ப­டு­வ­துடன் வெள்ள அனர்த்­தத்துக்கு தீர்வு காணும் நட­வ­டிக்­கை­க­ளும் இதன்மூலம் செய்­யப்­படும். வர­லாற்றில் அதி­க­மான அபி­வி­ருத்­தி­களை செய்த ஒரு யுக­மாக சஜித் பிரே­ம­தா­சவின் யுகம் காணப்­படும்.  இம்மாவட்­டத்­துக்கு தேவை­யான அனைத்து அபி­விருத்திப் பணி­களும் மேற்­கொள்­ளப்­படும். வறு­மையை நீக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­துடன். அந்த வகையில் சமுர்த்தி வேலைத்­திட்டம் நடை­மு­றை­யி­லுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முப்­ப­தா­யிரம் குடும்­பங்­க­ளுக்கு சமுர்த்தி நிவா­ரண முத்­தி­ரைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனை இன்னும் விர­ிவு­ப­டுத்தி ரண­சிங்க பிரே­ம­தாச அன்று வழங்­கிய ஜன­ச­விய திட்­டத்­தி­னையும் மேல­தி­க­மாக மக்­க­ளுக்­காக வழங்கும் திட்­டத்­தி­னையும் மேற் கொள்வார்.

கேள்வி: சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: சஜித் பிரே­ம­தா­சவின் விஞ்­ஞா­ப­னத்தில் சகல விட­யங்­க­ளும் உள் வாங்­கப்­பட்­டுள்­ளன. அபி­வி­ருத்தி புரட்­சிகள் தொடர்­பிலும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. சகல இனங்­க­ளையும் சகல மதங்­க­ளையும் கௌரவப்­ப­டுத்தும் வகையில் இவ­ரது விஞ்­ஞா­பனம் அமைந்­துள்­ளது. அந்த விஞ்­ஞா­ப­னத்தை இன்று இந்த நாட்­டி­லுள்ள சகல மக்­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள்.

கேள்வி: சஜித் பிரே­ம­தா­ச வெற்றி பெறு­வாரா?

பதில்: இன்று சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றிக்­காக இந்த நாட்­டி­லுள்ள சிங்­க­ள­வர்கள் தமி­ழர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்த­வர்கள் அனை­­வரும் ஒன்­று­பட்டு விட்­டார்கள். தமிழ், முஸ்லிம் கட்­சி­களின் ஆத­ரவும் அந்தக் கட்சி தலை­வர்கள் மலை­யக கட்­சி­களின் ஆத­ரவும் அந்த தலை­வர்­களின் ஆத­ரவும் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை மக்கள் அவருக்கான பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். எல்லா மத தலைவர்களின் ஆசியையும் பெற்றுள்ளதுடன் இளைஞர்களின் ஆதரவையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளனர்.

கேள்வி: மேலதிகமாக என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: நேர்மையான ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சஜித் பிரேமாசவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். வாக்குகளை சிதறடிக்காமல் நேரடியாக சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னம் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். சஜித்தின் வெற் றியை தடுக்க சிலர் இனங்களுக்கிடையிலான மோதல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.