சகல அர­சியல் அமைப்புச்சட்­டங்­களும்  ஒரு நாட்டின் பிர­ஜை­க­ளுக்­கு­ரிய உரி­மைகள் பற்றி விளக்­க­மாகக் கூறு­கின்­றன. இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் 1948 தொடக்கம் தமது பிரஜா உரி­மை­களை இழந்து நாடற்­ற­வர்­க­ளாக வாழ்ந்த காலத்தில் உரி­மைகள் எவையும் அற்­ற­வர்­க­ளாக வாழ்ந்­தனர்.

 

அவர்­களால் பொதுத் தேர்தல்­களில் வாக்­க­ளிக்க முடி­ய­வில்லை. அர­சாங்கத் தொழில்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. எந்­த­வித  சொத்­துக்­க­ளையும் வாங்­கவோ வைத்­தி­ருக்­கவோ அல்­லது ஏதேனும் தொழில்­களை தொடங்­கவோ எது­வித உரி­மை­களும் அற்­ற­வர்­க­ளாக  அவர்கள் வாழ்ந்து வந்­தனர்.

அர­சியல் ரீதி­யாக கூட எவ­ராலும் இப்­பி­ரிவினர் கருத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. அக்­கா­லத்தில் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்ற ஒரு சில மலை­யக மாண­வர்கள்  கூட குடி­யு­ரிமை இல்­லா­த­வர்கள்  என அதி­கா­ரி­களால் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.அவர்கள்  கல்வி கட்­ட­ணங்­களைச்  செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.  பின்னர் அர­சாங்கத் தொழில்­க­ளுக்கு விண்­ணப்­பித்தபோது அவர்­களு­டைய  பிறப்புச்சான்­றி­தழில்  ‘இந்­தியத் தமிழர்’ என குறிப்­பி­டப்­பட்­டதன் கார­ண­மாக, அவர் குடி­யு­ரிமை உள்­ள­வரா என விசா­ரிக்­கப்­பட்­டது.  

1972ஆம் ஆண்டின் அர­சி யல்  சட்­ட­மானது  ஏரா­ளமான  அடிப்­படை  உரி­மை­களைப்  பற்றி  கூறி­னாலும்,  அவையா வும் பிர­ஜை­க­ளுக்கு மட்­டுமே  உரி­யன என்ற மட்­டுப்­பாடு அப்­போது  இருந்­துள்­ளது. ஏறத்­தாழ ஒன்­பது  இலட்சம்  மலை­யகத் தமி­ழர்கள் நாடற்­ற­வர்­களாய் மேற்­ கூ­றப்­பட்ட உரி­மைகள் இல்­லாது நீண்ட காலம் வாழ நேரிட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் சிறிமா சாஸ்­திரி மற்றும் சிறிமா இந்­திரா காந்தி ஒப்­பந்­தங்­க­ளின்­படி (1964, 1971) 6,25000 பேர்  இந்­தியக்  குடி­யு­ரி­மைக்கு  விண்­ணப்­பித்து  உரிய எண்­ணிக்­கை­யி­லா­னவர்கள்  படிப்­ப­டி­யாக  இந்­தி­யா­வுக்குச் சென்­றனர்.  1988  ஆம் ஆண்­ட­ளவில் 237,000  பேருக்கு இலங்கை குடி­யு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவ்­வாண்டில்  231,000  பேர்களுக்கும்  அவர்­க­ளது வழிதோன்றல்க­ளுக்கும் இலங்கை குடி­யு­ரிமை வழங்­கப்­படவேண்டி  இருந்­தது.  அத்­துடன்  84000  பேர்­களும் அவர்­க­ளது வழித்தோன்­றல்­களும்  இந்­திய குடி­யு­ரிமை பெற்று இலங்கை­யி­லேயே தங்­கி­யி­ருந்­தனர்.

இக்­கா­லப்­ப­கு­தியில்தான் அப்­போது பிர­தமமந்­தி ரி­யாக இருந்த பிரே­மதாச பாரா­ளு­மன்­றத்தில் இவ்வாறு எஞ்­சி­ய­வர்­க­ளுக்கு குடி­யு­ரிமை  வழங்­கு­வ­தற்கான  சட்­டத்தை  கொண்டு  வந்து மிக அரு­மை­யா­ன­தொரு சொற்­பொ­ழிவை  ஆற்­றினார். அவ­ரு­ டைய உரையில் இச்­சட்­டத்தின் கார­ண­மாக இம் ­மக்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கு­வ­தற்­கான பல கார­ணங்­களை மிக தெளிவாக எடுத்­து­ரைத்தார். 

இவ்­வாறு முன்னாள் பிர­தமராக இருந்த ரண­சிங்க பிரே­ம­தா­ச­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட நாடற்றவர்­க­ளுக்­கான குடி­யு­ரிமை சட்­ட­மா­னது  மலை­யக மக்­க­ளுக்கு  ஏரா­ள­மான  உரி­மை­களை வழங்­கி­யது. அவர்­க­ளு­டைய  வாக்­கு­களை  இன்றுவரை பிர­தான தேசிய  கட்­சிகள்  நாடு­கின்­றன. அமரர் சௌ.தொண்­டமான், பெரிய சாமி சந்­தி­ர­சே­கரன், ஆறு­முகம் தொண்­டமான்  தொடக்கம்  தற்­போது  மனோ  கணேசன்,  பழனி  திகாம்­பரம் வரை  ஐவர் அமைச்­ச­ரவை  உறுப்­பி­னர்­க­ளாக  இருந்து  வந்­துள்­ளனர். மலையக  பெருந்தோட்ட வச­தி­களை கவ­னிப்­ப­தற்­கான தோட்ட உட்­கட்­ட­மைப்பு  அமைச்சு  ஒன்று  நிறு­வப்­பட்­டது. வே.இரா­தா­கி­ருஷ்ணன், சச்­சி ­தா­னந்தன்,  பெ.இரா­ தா­கி­ருஷ்ணன்,  முத்து  சிவ­லிங்கம்,  வடிவேல்  சுரேஷ்,ஜெக­தீஸ்­வ ரன், புத்­தி­ர­சி­கா­மணி என  பலரும் பிரதி அமைச்­சர்­க­ளா­கவும், இராஜாங்க அமைச்சர்­ க­ளாகவும்   பதவி வகித் ­தனர். 

இந்து கலா­சார அமைச்சின்  இராஜாங்க அமைச்­ச­ராக பி.பி.தேவ ராஜ் பணி­யாற்­றினார். மலை­யக மக்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கும்.மாகாண  சபைக­ளுக்கும் பிர­தேச சபை­க­ளுக்கும் தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­தனர். அவர்­க­ளுக்­கென்றே சில பிர­தேச சபை­களும் உரு­வாக்­கப்­பட்­டன.

மலை­யக மக்கள் பெற்றுக் கொண்ட  குடி­யு­ரிமை  கார­ண ­மாக பெற்ற அர­சியல் பலம் அவர்­க­ளுக்­கென ஒரு கல்­வி யில்  கல்­லூரி, ஆசி­ரியர்  பயிற்சி  கல்­லூரி, தொழில்நுட்ப கல்­லூரி என்­பன உரு­வாக கார­ண­மாக இருந்­தது. அண்­மைக்­கா­லங்­களில் 10ஆக இருந்த 1AB  பாட­சா­லைகள் தற்­போது 25 ஆக அதி­க­ரித்­ துள்­ளன. மலை­யக பாட­சா­லை க­ளிலும் கல்வி அலு­வ­ல­கங்­க­ளிலும்   இன்று மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாக   கொண்ட ஆசி­ரி­யர்­க­ளாலும்   அதி­கா­ரி­க­ளாலும்  நிறைந்­துள்­ளது. இவை யாவற்­றுக்கும் கார­ணமான1988 ஆம் ஆண்டு குடி­யு­ரிமை சட்­டத்தை கொண்­டு­வர முன்னாள் பிரதமர் ரண சிங்க பிரே­ம­தாச வழங்கிய பங்­க­ளிப்பும் அர்ப்­ ப­ணிப்பும் போற்­றத்­தக்­க­தொன்­றாகும்.

30.01.1986 அன்று பாரா­ளு­மன்­றத்தில் நாடற்ற ஆட்­க­ளுக்கு பிரஜா உரிமை வழங்­குதல் சட்ட  மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து  பிர­தமர்  ஆர். பிரே­ம­தாச ஆற்­றிய உரை அவர் எடுத்துக் கூறிய கார­ணங்கள் பல­ராலும் பாராட்­டப்­பட் ­டன.

1. குடி­யு­ரி­மை­யற்று வாழும் அவர்கள்    சார்பில் இந்­தியா தலை­யிடும் நிலை ஏற்­பட லாம் இதனைத் தவிர்க்க அனை­வ­ருக்கும்    குடி­யு­ரி மை வழங்­கப்­படல் வேண் டு ம்.

2. குடி­யு­ரி­மை­யற்ற அவர்­களின் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றன. அதனால் அவர்­க­ளுக்குக் குடி­யு­ரிமை வழங்­கப்­படல் வேண்டும்.

3. குடி­யு­ரி­மை­யற்ற சகல மலையகத்தமி­ழர்­களும் இலங்­கையில் பிறந்­த­வர்கள். எனவே அவர்கள் குடி­யு­ரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள்.

4. இவர்கள் எவ­ருமே இந்­தியா செல்ல  விரும்­ப­வில்லை.  அவர்கள் இலங்­கையைத் தமது தாய்­நாடு எனக்­க­ருதி வாழ்­ப­வர்கள்.

பிர­தமர் ஆர்.பிரே­ம­தாசஅப்­போது மேற்­கொ­ண்ட இந்­ந­ட­வ­டிக்­கைக்கு சிறிமா அம்­மையார் பாரா­ளு­மன்­றத்தில் கடு­மை­யாக  எதிர்ப்பு  தெரிவித்தார். அவர்  கூறிய  கண்­ட­னங்கள். பிர­தமர்  பிரே­ம­தாச சிங்கள  மக்­களின் நலன்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளார்.  இவ்­வாறு  நாடற்­ற­வர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கு­வது  இலங்கை  இந்­திய ஒப்­பந்­தங்­க­ளுக்கு (1964, 1970) முர­னாணது.   ஐக்­கிய    தேசியக் கட்சி இந்­திய வம்­சா­வளி மலை­யக  மக்­களின் வாக்­கு­களைப்  பெற்று  தொடர்ந்து  அதி­கா­ரத்தில் இருக்க முயற்சி செய்­கின்­றது என்றார்.

இந்த பின்­பு­லத்தில் நோக்­கும்­போது இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தாச மலை­யக மக்­க­ளுக்கு சாத­க­மான  நிலைப்­பா­டு­களை மேற் கொண்ட ரண­சிங்க  பிரே­ம தாசவின் அர­சியல் பாரம்­ப­ரி­யத்தில் வழி வந்­தவர். என வே  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ராக  அன்னம் சின்­னத்தில் களம் இறங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாசவின் கரங்­களை  பலப்­ப­டுத்தும்  வகையில்    முழு ஆத­ரவும் வழங்­க­வேண்­டி­யது தமிழ் மக்­களின் தார்­மீக கட­மை­யாகும்.

பிர­தமர் ரண­சிங்க பிரேமதாசவின்  பதவிக் காலத்தில் அர­சாங்கத்துறை வேலைவாய்ப்­பு­க­ளுக்கு இன விகிதா­சாரம் பின்­பற்றப் பட்டது   இதனால் தமி­ழர்­க­ளுக்கு 18% வேலை வாய்ப்புகள் ஒதுக்­கப்­பட்­டன. இந்த 18% வேலை­வாய்ப்பு  வரம்­புக்குள் மலையக இளை­­ஞர்­களின் வேலை­வாய்ப்­பு­களும் உறுதி செய்­யப்­பட்­ட­தோடு வெளிவி­வ­கார சேவையில்  பலர்  நிய­மனம் பெற்­றனர். மலை­ய­கத்தைச்  சேர்ந்த  கிருஷ்­ண­மூர்த்தி  உட்­பட  இரா­ஜதந்­திர சேவை யில் பலர்  உயர் பதிவ வகிக்­கின்­றனர். பிரே­ம­தா­சவின்  நியா­ய­மான  கொள்கை பிற்­கா­லத்தில் கைவி­டப்­பட்­டதன்    கார­ணமாக  அர­சாங்கத்துறையில் தமிழர்­களின் பிர­தி­நிதித்­துவம் பெரும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது  என்று  மலை­யக  ஆய்­வா­ளரும்  பேரா­சி­ரி­ய­ரு­மான சோ.சந்­தி­ர­சே­கரன் தன் கட்­டுரையில் குறிப்­பிட்­டுள்­ளது எடுத்­துக்­காட்­டாகும்.

ரண­சிங்க பிரே­ம­தாச ஜனா­தி­ப­தியாக பத­வி யேற்ற இந்த நாட்டின் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அதுவரை காலமும்  நிலவிவந்த  பிரபுத் துவ,மேல் மட்ட தலைமைத்துவத்துக்கு மாற்றீடாக வும், சவாலாகவும் அது அமைந்தது.