சிம்பாப்வேயில் நிலவும் கடும் வறட்சிக் காரணமாக அந் நாட்டின் வாங்கே தேசிய பூங்காவில் கடந்த இரண்டு மாதங்களில் 105 யானைகள் உயிரிழந்ததுடன் மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பாக அந்நாட்டின் உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக, தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துவிட்டன. நாட்டில் உள்ள மற்ற விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, மான் இனங்கள் என அனைத்து விலங்கினங்களும் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. சில பறவை இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை, மரக்கிளைகளில் மட்டுமே வாழ முடியும். ஆனால், அந்த மரங்களை யானைகள் முறித்துவிட்டன. மழை பெய்தால் மட்டுமே நிலைமை மேம்படும் என்றார்.