பொலி­விய முன்னாள் ஜனா­தி­பதி ஈவோ மொரா­ல­ஸுக்கு மெக்­ஸிக்கோ அர­சியல் புக­லிடம் வழங்­கி­யுள்­ளது.

தேர்­தலில் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றஞ்­சாட்டி நாட­ளா­விய ரீதியில் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தை­யொட்டி அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­மைக்கு மறு­தினம்  அவ­ருக்கு இவ்வாறு புக­லிடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஈவோ மொராலஸ் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் வெளியி­டப்­பட்ட செய்­தியில், தான்  பொலி­வி­யாவை விட்டுச் செல்­வ­தா­கவும் ஆனால் மேலும் பலத்­து­டனும் சக்­தி­யு­டனும் தான் திரும்பி வர­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

மெக்­ஸிக்கோ அர­சாங்­கத்­திற்குச் சொந்­த­மான விமா­ன­மொன்றில் ஈவோ மொராலஸ் ஏறி­யுள்­ளதை  மெக்­ஸிக்கோ வெளிநாட்டு அமைச்சர் மார்­செலோ எப்ரார்ட் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அதே­ச­மயம் பொலி­விய இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி, மொரா­லஸின் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் மோதலில் ஈடு­பட்­டுள்ள பொலி­ஸா­ருக்கு ஆத­ர­வ­ளிக்க படை­யி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். மேற்­படி மோத­லில்­ சுமார் 20 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

தன்னை பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நிர்ப்­பந்­தித்த இருண்ட சக்­தி­களை எதிர்த்து நிற்க மொராலஸ் ஏற்­க­னவே தனது ஆத­ர­வா­ளர்­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

பொலி­விய  பாரா­ளு­மன்ற செனட் சபையின்  பிரதித் தலைவர்  ஜீனைன் அனெஸ்  கூறு­கையில், புதிய தேர்­தல்கள் இடம்­பெறும் வரை  அந்­நாட்டின்  இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக தான் பதவி வகிக்­க­வுள்­ள­தாக தெரிவித்தார்.

இந்­நி­லையில் மொராலஸ் பதவி லில­கி­ய­தையும் அவர் நாட்டை விட்டு வெ ளியே­று­வ­தையும் அவ­ரது எதிர்ப்­பா­ளர்கள் விழா­வாக கொண்­டா­டினர்.

மொரா­லஸின் பதவி விலகல் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெ ளியி­டு­கையில்,  அவ­ரது இரா­ஜி­னாமா மேற்கு  அரைக்­கோ­ளத்­திற்­கான ஜன­நா­ய­கத்தில் முக்­கிய தரு­ண­மாகும் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­ச­மயம் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சால் விடுக்­கப்­பட்ட செய்­தியில்,  எதிர்க்­கட்­சி­ய­ினரால் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­முறை அலை ஈவோ மொரா­ல­ஸிற்கு தனது ஜனா­தி­ப­திக்­கான ஆணையை  பூர்த்தி செய்­வ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொலி­வி­யாவில் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ராக வன்­மு­றை­மிக்க கோழைத்­த­ன­மான  சதிப்­பு­ரட்­சி­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக  கியூப ஜனாதிபதி மிகுயல் டியஸ் கானெல் தன்னால் டுவிட்டர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவுடைமை நாடுகளான நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகியன தாம் மொராலஸுடன்  ஒன்றுபட்டு நிற்பதாக உறுதியளித்துள்ளன.