(நா.தனுஜா)

நாட்டில் தற்­போதும் போதிய ஊடக சுதந்­திரம் இல்லை என்றே நான் கரு­து­கின்றேன். எனவே எதிர்­வரும் 16 ஆம் திக­தியின் பின்னர் தற்­போ­தைய ஊடக சுதந்­தி­ரத்தை விரி­வாக்கி, மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வேன். அத்­தோடு ஊடக சுதந்­தி­ரத்­தையும் அதன் நட­வ­டிக்­கை­க­ளையும் அடுத்­த­கட்­டத்­திற்கு கொண்டு செல்­வ­தற்­கான சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக ஊடக அபி­வி­ருத்தி கேந்­திர நிலை­ய­மொன்றை ஸ்தாபிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டி­ருக்கிறேன் என்று ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச நேற்று பத்­த­ர­முல்­லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அந்­நி­கழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

நாடொன்றைப் பொறுத்­த­வரை அதன் ஜன­நா­ய­கத்தை பாது­காக்­கின்ற நான்­கா­வது தூண் ஊடகம். அர­சி­ய­ல­மைப்பு, நிறை­வேற்­ற­தி­காரம், நீதி­மன்றம் ஆகிய மூன்று தூண்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாட்டின் நிர்­வாகம் நடை­பெ­று­கின்­றது. அதன் தொடர்ச்­சி­யாக சுதந்­திர ஊட­கத்­துறை என்­பது மக்­களின் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முக்­கிய நான்­கா­வது தூண் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன்.

எனவே நாட்டின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­பதில் முக்­கிய பங்­காற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள், இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் உரு­வாகும் அர­சாங்­கத்தின் ஊடாக ஜன­நா­யக ரீதி­யான ஊடக சுதந்­திரம் உறு­தி­செய்­யப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை மீண்டும் நினை­வு­ப­டுத்திக் கொள்­வது மாத்­தி­ரமே தற்­போது எம்­மிடம் எஞ்­சி­யி­ருக்­கின்­றது.

ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருந்த அர­சாங்கம் தொடர்பில் விமர்­சித்­தமை, கருத்­துக்­களை வெளி­யிட்­டமை, யோச­னை­களை முன்­வைத்­தமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக லசந்த விக்­கி­ர­ம­துங்க, பிரகீத் எக்­னெ­லி­கொட, கீத் நொயார், போத்­தல ஜயந்த, உபாலி தென்­னகோன் போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நேர்ந்­ததைப் பார்க்கும் போது, கடந்த காலத்தில் வென்­றெ­டுத்த சுதந்­தி­ரத்தைத் தக்­க­வைத்துக் கொள்ளும் பொறுப்பு அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் உண்டு என்­பது தெளி­வா­கின்­றது. எனவே இத்­த­ரு­ணத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்தைத் தொடர்ந்தும் பாது­காப்­பதா? அல்­லது ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பாது­காப்­பற்ற பழைய யுகத்­திற்குள் மீண்டும் செல்­வதா? என்ற தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும்.

தற்­போதும், கடந்த காலத்­திலும் நாம் ஊட­கங்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு இலக்­கா­கி­யி­ருக்­கின்றோம். எனினும் அதனை அடக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. ஏனெனில் நாம் ஊடக சுதந்­தி­ரத்­திற்கு மதிப்­ப­ளிக்­கின்றோம். அது­மாத்­தி­ர­மன்றி நாட்டின் தலை­வ­ராக இருக்­கின்ற ஒரு­வ­ருக்கு பிற­ரு­டைய கருத்­துக்­களை பொறு­மை­யாக செவி­ம­டுக்கும் ஆற்றல் இருக்க வேண்டும் என்றார்.