வாக்­கு­களை யாருக்கு வழங்­க­வேண்டும் என்­பதை கூறித்தெரி­ய­ வேண்டி­ய­தில்லை - ஆனந்­த­சங்­கரி

Published By: R. Kalaichelvan

13 Nov, 2019 | 11:31 AM
image

மக்கள் தங்கள் பெறு­ம­தி­யான வாக்­கு­களை யாருக்கு வழங்க வேண்டும் என்­பது நாம் கூறி தெரி­ய­வேண்­டி­ய­தில்லை என்று தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் செய­லாளர்  வீ. ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நம் நாட்டின் தலை­வி­தி­யையும் எம்­நாட்டில் வாழும் பல்­வேறு இன மக்­களின் தலை­வி­தி­யையும் நிர்­ண­யிக்­கக்­கூ­டிய ஒரு முக்­கிய தேர்­தலை நம் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள வேளையில் வட–­கி­ழக்கு தமிழ் மக்கள் சார்பில் பேசவும் செயற்­ப­டவும் வேண்­டிய முக்­கிய கடமை எனக்­குண்டு.

ஏனெனில் பாரா­ளு­மன்­றத்­திலும் அல்­லது வேறு இடங்­க­ளிலும் அவர்­க­ளுக்­கான முறை­யான பிர­தி­நி­தித்­துவம் இல்லை. தொடர்ந்து நடை­பெற்ற 3 ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் 2005ஆம் ஆண்டுத் தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மான விட­யத்தை ஏனை­ய­வற்­றுடன் தொடர்­பு­ப­டுத்­தாமல் தேர்தல் பிர­சா­ரத்­தி­லி­ருந்து பிரித்­தெ­டுத்து தேர்தல் முடிந்­தபின் அதைப்­பற்றி ஆலோ­சிக்­கலாம் என பல தடவை கோரி­யி­ருந்தேன். வெற்றி பெற்ற வேட்­பாளர் ஏனைய வேட்­பா­ளர்­க­ளுடன் இணைந்து ஒரு தீர்­மா­னத்தை எடுத்து பொது ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடலாம் எனவும் கோரி­யி­ருந்தேன்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் வடக்கு–கிழக்கு வாக்­கா­ளர்கள் அப்­பாவித்தன­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரித்­ததன் மூலம் ஜன­நா­யகம் தடம்­பு­ரள கார­ண­மாக இருந்­துள்­ளனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அப் பெயரை மோச­டி­யா­கவே பாவிக்­கின்றோம் எனத் தெரிந்­தி­ருந்தும் தமிழ் மக்­களை கூட்­ட­மைப்பு தப்­பாக வழி­ந­டத்­தி­யுள்­ளது. முக்­கூட்டுத் தலை­வர்­க­ளான திரு­வா­ளர்கள் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம், ஜீ.ஜீ.பொன்­னம்­பலம், எஸ். தொண்­டமான் ஆகியோர் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை மிக சக்­தி­யு­டை­ய­தா­கவும் பெரிதும் மதிக்­கத்­தக்­க­தா­கவும் வழி­ந­டத்­தினர். ஆனால் துர்­­திர்ஷ்­ட­வ­ச­மாக  இரா. சம்­பந்தன், அ. அமிர்­த­லிங்கம்  படு­கொ­லையின் பின் அவர் வகித்த கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் பத­வியை தனக்கே தர­வேண்­டு­மென அடம்­பி­டித்து பெற்­றுக்­கொண்டார். மிகவும் கண்­ணி­ய­மான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தியவரும் அவரே.

2004ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி போட்­டி­யி­டு­மென தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்­தி­ருந்தார். ஆச்­ச­ரி­யத்­தக்க வகையில் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்த  சம்­பந்தன்  விடு­தலைப் புலி­களால் தெரிவு செய்­யப்­பட்ட சில வேட்­பா­ளர்­களின் பெயரை உள்­ள­டக்கி தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­யிடம் கைய­ளித்த போது அப்­பத்­திரம் நாட்­டுக்கே பெரும் அதிர்ச்சி தரும்­வ­கையில் நிய­மனப் பத்­திரம் விடு­தலைப் புலி­களின் சார்­பாக கைய­ளிக்­கப்­ப­டு­வ­தாக பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்தார்.

வேதனை தரத்­தக்க இச்­செ­ய­லினால்  - மிகச் செல்­வாக்குப் பெற்ற ஒரு சிரேஷ்ட அர­சியல் கட்­சி­யா­கிய தமிழர் விடு­தலைக் கூட்­டணி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கட்சி ரீதி­யாக போட்­டி­யிடும் உரி­மையை இழந்­தது. இக்­கட்­டத்தில் ஒன்று தேர்­தலில் பங்­கு­பற்­றாமல் இருக்­க­வேண்டும் அல்­லது சுயேச்­சை­யாக போட்­டி­யிட வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யது. அத் தேர்­தலில் பெரு­ம­ளவில் சண்­டித்­தனம், மிரட்டல், ஆள்­மா­றாட்டம் போன்ற அரு­வ­ருக்­கத்­தக்க செயல்­களால்  சம்­பந்தன் தலை­மையில் கூட்­ட­மைப்பு தேசி­யப்­பட்­டியல் 2 ஆச­னங்­க­ளுட்­பட 22 ஆச­னங்­களை பெற்­றது.

பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு மாறாக மோசடி மூலம் தெரி­வா­கிய படியால் தொடர்ந்து ஆட்­சிக்கு வந்த அர­சு­களும் சர்­வ­தேச சமூ­கமும் இவர்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­காது பாரா­மு­க­மாக இருந்­தது. அதன் விளைவால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அப்­பாவிப் பொது­மக்கள் யுத்­த­க­ளத்தில் உயி­ரி­ழக்க நேர்ந்­தது. உண்­மை­யான மக்­களின் குறை­பா­டு­களைக் கூட அர­சு­ கண்டும் காணாமல் இருந்­தது.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத் ­தேர்­தலில் ஏற்­பட்ட அதிர்ச்சி தந்­த­மு­டிவும் கூடு­த­லான கூட்­ட­மைப்பின் பொய்­யான பிர­சா­ரங்­க­ளி­னாலும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முன்­பி­ருந்த செல்­வாக்கைத் திரும்பப் பெற­மு­டி­யாது போனது.  2005இல் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­

தலில் வேட்­பா­ளர்­களல் ஒரு­வ­ரா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக முன்­வைத்த சமஷ்டி ஆட்சி முறையை கணக்கில் எடுக்­காது மக்­களை தேர்­தலைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறு புலிகள் கோரி­யி­ருந்­தனர். அப் பிரே­ர­ணைக்கு அன்று சிங்­கள மக்கள் 49வீதம் ஆத­ரவு வாக்­க­ளித்தும் தமிழ் மக்கள் அத்­தேர்­தலைப் பகிஷ்­க­ரித்­தமை முட்­டாள்­த­ன­மா­னது மட்­டு­மல்ல கூட்­ட­மைப்பு இச்­செ­யலின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கும் துரோகம் இழைத்­தது.

இத்­த­கைய பல கண்­ட­னங்கள் என்னால் முன்­வைக்க முடி­யு­மாக இருந்தும் மிகச் சொற்­ப­மா­ன­வற்­றையே குறிப்­பிட்­டுள்ளேன். தமிழ் மக்­க­ளுக்­கு நான் வழங்­கக்­கூ­டிய ஆலோ­ச­னை­ யா­தெனில் எதிர்­கா­லத்­தி­லேனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய ஆலோ­ச­னைகள் மற்றும் வழி­காட்­டல்­களை உதா­சீனம் செய்­து­ பெரும் தமிழ்த் தலை­வர்­க­ளா­கிய  சா.ஜே.வே. செல்­வ­நா­யகம், ஜீ.ஜீ.பொன்­னம்­பலம், எஸ்.தொண்­டமான், அ. அமிர்­த­லிங்கம் மு. சிவ­சி­தம்­பரம்,  கலா­நிதி நீலன் திருச்­செல்வம் போன்ற மற்றும் பலரின் தலை­மை­யிலும் வழி­காட்­ட­லிலும் இயங்கும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­மையை மீண்டும் மதித்து எம்­முடன் இணை­யு­மாறு வேண்­டு­கிறேன்.

தமிழர் விடு­தலைக் கூட்­டணி பெரு­மை­யோடு கூறு­வ­து­ யா­தெனில் இந்தப் பெருந்­த­லை­வர்­களின் வழி­காட்­டல்­களை தற்­போதும்  நாமே பின்பற்றுவதை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக் கொள்வீர்கள். அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணி கடைப்பிடித்து வந்த உயர் கொள்கைகள் எதிர்காலத்திலும் கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து- ஒவ்வொரு தமிழரையும் இழந்த உரிமைகளை -மீளப் பெறுவதற்காக அணிதிரளுமாறு வேண்டுகிறேன்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னலம் கருதி எவ்வாறு தீர்மானங்களை எடுப்பவர்கள் என நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சரித்திரத்தை அறிந்தவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிந்தவர்களும் தத்தமது பெறுமதிமிக்க வாக்கை யாருக்கு அளிக்கவேண்டும் என நாம் கூறித் தெரிய வேண்டியதில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38