தமிழ் பேசும் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதன் மூலமோ அல்­லது தேர்­தலை புறக்­க­ணிப்­பதன் மூலமோ கோத்­த­பா­யவை தோற்­க­டித்து விட முடி­யாது.

அப்­படி செய்தால் மறை­மு­க­மாக கோத்­த­பா­ய­வுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு சம­னா­கி­விடும் என யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்டம் ஆலை­ய­டி­வேம்பு கலா­சார மண்­ட­பத்தில் நேற்­று­முன்தினம் மாலை இடம்­பெற்ற மாபெரும் தேர்தல் பிர­சார கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அம்­பாறை மாவட்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வ­ரனின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்­துக்கு வரு­கை­தந்த அவரை பெருந்­தி­ர­ளான மக்கள் ஒன்­றி­ணைந்து வர­வேற்­றனர்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

வெள்­ளைவேன் கடத்தல் எனும் சொல் அனை­வரும் அறிந்து புரிந்த ஒரு சொற்­றொ­ட­ராக மாறி­யுள்­ளது. அந்த அள­வுக்கு வெள்ளை வேனை பிர­சித்­தப்­ப­டுத்­தி­யவர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஆவார்.

வெள்ளை வேன்­களில் ஒன்றை செலுத்­திய சாரதி கோத்­த­பா­யவின் உத்­த­ரவின் பேரிலே 300இற்கும் மேற்­பட்­ட­வர்களைக்  கடத்தி முத­லை­க­ளுக்கு இரை­யாக கொடுத்தோம் என பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ வெற்றி பெற்ற பின்னர் அமெ­ரிக்­காவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­வரே இந்த கோத்­த­பாய ராஜ­பக் ஷ. இறக்­கு­மதி செய்­யப்­பட்­டவர் உட­ன­டி­யாக பாது­காப்பு செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட போதிலும் அவர் இலங்கை பிர­ஜை­யாக இருக்­க­வில்லை. ஆனாலும் தான் இலங்கை பிரஜை என்­ப­தற்­கு­ரிய ஆவ­ணங்கள் இருப்­ப­தாக சில­வற்றை காண்­பித்தார்.

 அந்த ஆவ­ணங்கள் போலி­யா­னவை என குற்­றப்­பு­ல­னாய்வு துறை அறிக்கை ஒன்றை நீதிவான் நீதி­மன்றில் சமர்ப்­பித்­தது. அந்த வழக்கை விசா­ரித்த உயர்­நீ­தி­மன்றம் அப்­போது அதனை நிரா­க­ரித்து இருந்­தாலும் போலி­யான ஆவ­ணங்­களை சமர்ப்­பித்தே இதனை பெற்­றாரா என்­பதை அறியும் பொருட்டு குற்­ற­வியல் வழக்கை தொடர்ந்து நடத்­தலாம் என சொல்­லி­யது.

இந்­நி­லையில்  இவர் இலங்கை பிர­ஜை­யினை இரண்­டாம்­தரம் பெற்­றாரா என்­பது ஒரு கேள்­விக்­குறி. அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரி­மை­யை உண்­மை­யா­கவே துறந்­தி­ருக்­கின்­றாரா என்­பது இன்­னு­மொரு கேள்­விக்­குறி.

அப்­ப­டி­யான ஒரு­வரை நாம் தோற்­க­டிக்க வேண்­டு­மென்றால் செய்ய வேண்­டி­யது ஒன்­றே­யொன்று மாத்­தி­ரமே. சிலர் சொல்­வ­துபோல் தமிழ் பேசும் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதன் மூலமோ அல்­லது தேர்­தலை புறக்­க­ணிப்­பதன் மூலமோ அது முடி­யாது. அப்­படி செய்தால் மறை­மு­க­மாக கோத்­த­பா­ய­வுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு சமம்.

ஆகவே நீங்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து அன்னச் சின்னத்துக்கு நேரே ஒரு புள்ளடி இட்டு மூலம் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்யுங்கள் சஜித் பிரே­ம­தா­சவை நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக மாற்­றுங்கள். அவர் சொன்­ன­வற்றை செய்ய வைக்கும் முழுப்­பொ­றுப்­பையும் நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.