நாட்­டுக்கு மாற்றம் ஒன்று வர­வேண்டும். அந்த மாற்றம் மஹிந்த, கோத்தா மாற்­ற­மாக அமை­ய­ வேண்டும். எமது மக்­களின் தேவை என்ன என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். அதனை மஹிந்த, கோத்தா ஆகிய இரு­வ­ருமே இப்­போது உங்­க­ளி­டத்தில் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். ஆகவே மொட்டு சின்­னத்தை வெற்­றி­பெற வைப்­ப­தன்­மூலம் பாரிய அபி­வி­ருத்­தி­களை எதிர்­பார்க்க முடியும் என ­இ­லங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார்.

கொட்­ட­கலை விளை­யாட்டு மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் தலை­மை­வ­கித்து உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் கூறு­கையில்,

நுவ­ரெ­லியா – மஸ்­கெ­லியா தேர்தல் தொகு­தியில் மொட்டு சின்­னத்தை வெற்­றி­பெற வைத்து பாரிய அபி­வி­ருத்­தி­களை நாம் எதிர்­பார்க்க முடியும். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்கும் கட்­சி­களில் பெரும்­பான்­மை­யான சிறு­பான்மை கட்சி இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் என்­பதை அவர் தெளி­வு­ப­டுத்­தினார்.

வானமே நமது எல்லை. ஒற்­று­மையே நமது பலம். எனவே மக்கள் அனை­வரும் ஒற்­று­மையை பலப்­ப­டுத்தி தாமரை மொட்டு சின்­னத்­திற்கு வாக்­க­ளித்து வெற்றி­பெற செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­து­வ­தாக அவர் தெரி­வித்தார்.

கூட்­ட மேடையில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் நாம் எமது மக்­க­ளுக்­காக கேட்டுக் கொண்­ட­தற்கமைய செய்ய வேண்­டிய அபி­வி­ருத்­திகள் தொடர்பில் உங்­க­ளிடம் தெரி­வித்­தார்கள்.

அந்­த­வ­கையில், மலை­யக மக்கள் எதிர்­பார்க்கும் அபி­வி­ருத்­திகள் அவர்களூடாக எமக்கு கிடைக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. கொத்­ம­லையில் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்டம் ஒன்றில், ஒருவர் 1500 ரூபாவை சம்­பளமாக தரு­வ­தாக கூறினார். அது கிடைக்­குமா? என உருக்­க­மான கேள்­வியை எழுப்­பினார்.

நாம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் முன்­வைத்த கோரிக்­கை­களில் எமக்கு வீட­மைப்புத் திட்டம் வேண்டும். வீடு­க­ளுக்கு கூரை வேண்டாம் என தெரி­வித்தோம். மாறாக கூரை­க­ளுக்கு பதில் மேல் மாடிகள் அமைக்கும் வகையில் வீட­மைப்புத் திட்­டத்தை நாம் கேட்­டுள்ளோம்.

இது எதிர்­கா­லத்தில் எமது பிள்­ளைகள் பயன்­பெறக் கூடிய ஒன்­றாக அமையும். மாடி வீட்டனன் மேலே இருந்து எச்சில் துப்­பினால் கீழே வரு­வ­தாக சிலர் சொல்­லு­கின்­றார்கள். எச்சில் கீழே விழாமல் வேறு எங்கு விழும். நடை­மு­றை­க­ளுக்கு சாத்­தி­ய­மான விட­யங்­களை இந்த தலைவர்கள் நமக்கு செய்து கொடுப்பதாக உங்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து தாமரையை போல மலையக மக்களின் வாழ்க்­கை மலர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.