முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரண­சிங்க பிரே­ம­தா­சவின் புதல்­வ­ரான சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அதேபோல், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ போட்­டி­யி­டு­கின்றார்.

களமிறங்­கி­யுள்ள இரண்டு வேட்­பா­ளர்­களில் யார் தமக்கு தேவை என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டிய முக்­கி­ய­மான தேர்தல் இது­வா­கும் என நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து தமிழ் முற்­போக்கு கூட்­டணி தல­வாக்­கலை நகர சபை மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு  தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

மலை­யக மக்­க­ளுக்கு தனி வீடு­களை அமைத்துக் கொடுத்து காணி உரி­மை­யையும் பெற்­றுக்­கொ­டுத்து கிரா­மங்­களில் கௌர­வ­மாக வாழச் செய்து வழி­காட்­டிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை என்றும் மறக்க மாட்டோம். மலை­யக வர­லாற்றில் அவ­ரது பெயர் நிச்­சயம் இடம்­பெறும்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தனி வீடு என்­பது பகற்­க­னவு என்றும், அவர்கள் குடி­யி­ருக்கும் லயனும் சுற்­றி­யுள்ள மரக்­கறித் தோட்­டமும் சொந்­த­மாக வேண்டும் என்றும் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில்தான், தனி வீடு சாத்­தியம் என்­பதை எடுத்துக் காட்டி மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு காணி உறுதிப் பத்­தி­ரங்­க­ளையும் அமைச்சர் திகாம்­பரம் பெற்றுக் கொடுத்து அது சாத்­தியமாகும் என்­பதை நிரூ­பித்துக் காட்­டி­யுள்ளார்.

இந்­நாட்டில் ஏழை எளிய மக்­களின் தோழ­னாக இருக்கும் சஜித் பிரே­ம­தாச அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்த இ.தொ.கா. வினர் எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்­தாலும் ஆறு­முகன் தொண்­டமான் 300 வீடு­க­ளையும் முத்து சிவ­லிங்கம் 300 வீடு­க­ளையும் அமைப்­ப­தற்கு நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருந்தார்.

இந்த நாட்டில் இருவர் ஐக்­கிய நாடுகள் சபையில் பிர­ப­ல­மா­ன­வர்­க­ளாக இரு­க்கின்­றார்கள். ஒருவர் முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச. அவர் 'அனை­வ­ருக்கும் வீடு' என்ற தொனிப்­பொ­ருளில் 1987 ஆம் ஆண்டை சர்­வ­தேச வீட­மைப்பு ஆண்­டாக பிர­க­டனம் செய்­தி­ருந்தார். அதனூடாக அவர் உல­க­ளா­விய ரீதியில் பிர­பலமடைந்­தி­ருந்தார். அத்­த­கை­ய­வரின் புதல்­வ­ரான சஜித் பிரே­ம­தா­ச, ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.

இரண்­டா­வது சர்­வ­தேச பிர­ப­ல­மாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ விளங்­கு­கின்றார். அவர் இலங்­கையில் வெள்ளை வேன் கடத்தல், கொத்து கொத்­தாக மக்­களை கொன்று குவித்தல் போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுடன் ஐக்­கிய நாடுகள் முன்னால், குற்­ற­வாளிக் கூண்டில் நிற்­கின்றார். இவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­தரராவார்.

எனவே, முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் வாரி­சு­க­ளான இரு­வரும் தேர்தல் களத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

 இது ஒரு முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்தலாக காணப்­ப­டு­கின்­றது. இவர்­களில் எமக்கு நன்மை செய்யக் கூடி­ய­வர்கள் யார் என்­பதை மக்­களே தீர்­மா­னித்து முடிவு செய்ய வேண்டும்.

இந்த இரு­வரில் மலை­யக மக்கள் மீது அக்­கறை கொண்டவராக சஜித் இருப்பதால் தான், தமிழ் முற்போக்கு கூட்டணி அவரை ஆதரிக்க முடிவு செய்து பிரசாரம் செய்து வருகின்றது. அதே முடிவில் தான் மக்களும் இருக்கின்றார்கள். சஜித் வெற்றி பெற்று மலையக மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட அன்னம் சின்னத்துக்கு வாக்களித்து அவரின் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.