( பிரதாப் )

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளின் மருத்துவ தேவைக்காக  சுகாதார அமைச்சு 2.1 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ, தேசிய ஒருங்கிணைப்பாளர் எச்.டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுதும்  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர மருத்துவ தேவைக்காக கடந்த 10 நாட்களில் இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

106 மருத்துவ குழுக்கள் இந்த மருத்துவ சேவைக்காக நாடுமுழுவதும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தை்தியர்கள், சுகாதார அதிகாரிகள், தாதிமார்கள் என  941 பேர் வைத்திய முகாம்களில் சேவையில் ஈடுபட்டுவருவதாக எச்.டி.பி. ஹேரத்  தெரிவித்தார்.

இதேவேளை 24 மணிநேர சேவை வழங்கும் நோக்கில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழு செயற்பட்டு வருவதாகவும், 53 வாகனங்களும் மருத்துவ சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ கருவிகள் என்பன அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.