நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அடுத்தாண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பத்தாயிரத்து 500 இற்கும் அதிகமான ஸ்டென்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பைபாஸ் எனப்படும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பாரிய நன்மை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.