அமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்

Published By: Rajeeban

12 Nov, 2019 | 08:43 PM
image

கிரிபண்டா டி சில்வா சுமணசேகர

தமிழில் ரஜீபன்

இது அவசரமான கடிதம்- நான் வழமையான மரியாதைகளை தவிர்க்க விரும்புகின்றேன்

அவ்வப்போது இராஜதந்திரிகளிற்கு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்பது உங்களிற்கு தெரியும்- ஆனால் அதற்கு அப்பால் நான் உங்கள் கவனத்திற்கு சில விடயங்களை கொண்டுவரவேண்டியுள்ளது.

நாங்கள் இந்த நாட்டில் தேர்தல்களை நேசிப்பது உங்களிற்கு தெரியும். கிரிக்கெட்டிற்கு பின்னர் எங்களின் முக்கிய பொழுதுபோக்கு தேர்தல்.

ஆனால் கடந்த சில காலங்களாக எங்கள் கிரிக்கெட் வீரர்கள் எங்களை மகிழ்ச்சிப்படுத்த மறந்துள்ளனர்.மேலும் கிரிக்கெட் சூதாட்ட சக்கரவர்த்திகளின் கரங்களில் விழுந்துள்ளது என்ற வதந்தியும் வெளியாகியுள்ளது. இவர்கள் எங்கள் நாட்டின் மிகவும் வருமானம் தரும்  தொழில்துறையான அரசியலிலும்  ஈடுபட்டுள்ளனர்.

கிரிக்கெட் குறித்து நாங்கள் காத்திருக்கலாம்.ஆனால் உங்களுடன் நான் ஆராய விரும்பும் விடயம் பிரஜாவுரிமை தொடர்பானது.

நான் அரசசார்பற்ற அமைப்பொன்றில் பிரஜாவுரிமை திட்டத்தில் பணியாற்றும் பெரும் ஊதியம் பெருபவன் இல்லை.

இந்த பிரஜாவுரிமை விவகாரம் ஜிஆர் தி கிரேட் தொடர்பானது.நாங்கள் அவர் நூறுவீதம் தேசப்பற்றுள்ளவர் என்பதை உறுதி செய்ய விரும்புகின்றோம்.அவர் எங்கள் தேசத்தை பாதுகாக்கப்போகின்றார்,அவர் ஐந்து வருடங்களிற்கு முன்னர் எங்கள் நாட்டை பாதுகாத்தார் தற்போது மீண்டும் பாதுகாக்க விரும்புகின்றார்.

கடந்த தடவை அவர் இரட்டை பிரஜையாகயிருந்தவேளை நாட்டை பாதுகாத்தார்,அந்தவேளை அவரது கைகள் உங்கள் மனிதாபிமான சட்டங்களால் பிணைக்கப்பட்டிருந்தன,ஏனென்றால் அவர் உலகின் பெரும் நாட்டின்  பிரஜையாக காணப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள உங்கள் சட்டங்கள் காரணமாக-எங்கள் நபரால்( உங்கள் நபர் அல்லது எங்கள் நபர்)அவரிற்கு பிடித்தமான வெள்ளை வானை முழுமையாக செலுத்த முடியவில்லை.

தான் பத்திரிகையாளர்கள் மற்றும் மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் பல வெள்ளை வான் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டால்- நாட்டை காப்பாற்றி களைப்படைந்த பின்னர் உங்கள் நாட்டிற்கு திரும்பமுடியாது என அவர் அச்சம் கொண்டிருந்தார்.

 அமெரிக்க நலன்களிற்கு ஆதரவளிக்கும் வரை எந்த கொலையாளியையும் அமெரிக்கா சகித்துக்கொள்ளும் என்பதை அவர் கடந்த முறை அறிந்திருக்கவில்லை.

ஆனால் அனைத்து ராஜபக்சாக்களும் அழகான கலிபோர்னியாலில் புகலிடம் பெற முடிந்ததை தொடர்ந்து அவர் அதனை உணர்ந்தார்.

உலகின் பல சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள்,சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தாங்கள் சோசலிஸ்ட்களாக இருக்காதவரை அமெரிக்காவில் தஞ்சம் பெறமுடியும் என்பதை உலகம் அறிந்திருக்கின்றது.

ஆகவே வெள்ளை வான்கள் மீது காதல் கொண்ட எமது நபர் -வான்கள் கோர்ப்பரேட் முதலாளித்துவத்தின் வழியில் செல்லாதவரை தன்னால் வெள்ளை வான்களை செலுத்த முடியும் என்பதை இறுதியாக உணர்ந்துகொண்டார்.

2015 இல் நாங்கள் நல்லாட்சியை ஏற்படுத்திய சில மாதங்களின் பின்னர் எங்கள் நல்ல மனிதர்களால் இலங்கைக்கு பாதுகாப்பாக வரமுடிந்தது. நல்லாட்சியின் கனவான்கள் மத்திய வங்கியை கொள்ளையடித்தது தெரியவந்ததால் அவர்கள் தங்கள் தார்மீகதன்மையை இழந்ததால் அவர்கள் பல டீல்களில் ஈடுபட்டனர்.

எங்கள் கதாநாயகன் ஜனாதிபதியாவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ளன.நாங்கள் அனைவரும் எங்கள் வெள்ளைவான்களை நன்கு  தயார்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்வதற்காக காத்திருக்கின்றோம்.

ஆனால் எங்கள் கதாநாயகனின் இதயம் இரண்டு இடத்திலிருந்தால்( ஒன்று இலங்கையிலும் மற்றையது அமெரிக்காவிலும்) எப்படி எங்கள் எதிர்காலம் மிகச்சிறந்ததாக மாறும்.ஏனென்றால் அமெரிக்கா எங்கள் பரம எதிரி.

நாங்கள் உங்கள் நாட்டை வெறுக்கின்றோம் அதன் காரணமாகவே நாங்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் கிறீன்கார்ட் விண்ணப்பங்களை அனுப்புகின்றோம். உங்கள் நாட்டிற்கு வந்து உங்களிற்கு சிறந்த பாடத்தை கற்பிப்பதற்காகவே கிறீன்கார்ட்டிகளிற்கு விண்ணப்பிக்கின்றோம்.

ஆகவே நாங்கள் எங்கள் பாதுகாவலர் உண்மையில் அமெரிக்க பிரஜையா  என்பதை அறிய விரும்புகின்றோம். உங்களால் அவர் இந்த தம்ம தேசத்தின் உண்மையான தேசப்பற்றாளர் என்பதை தெரிவிக்கும் கடிதமொன்றை தயவு செய்து அனுப்ப முடியுமா? அது போலியானதாகயிருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் அவர் தேர்தலில் வெற்றிபெறும்வரை அது  போலியானது என தயவு செய்து சொல்லவேண்டாம்.

அவர் வெற்றிபெற்றால் அவரது சகோதரர் ஊடக அமைச்சராக நியமிக்கப்படுவார்,அவர் அனைத்து அரச ஊடகங்களிற்கும் பொறுப்பானவராக விளங்குவார்.அவர் தனது சகோதரரான ஜனாதிபதியை தேசப்பற்றாளனாக சித்தரிப்பார்- மாற்றுவார்.

அவரின் இன்னொரு சகோதாரர் நீதித்துறையை பார்த்துக்கொள்வார்- ஜனாதிபதியின் ஒவ்வொரு சிறிய குற்றத்தையும் நியாயபூர்வமானதாக மாற்றுவார்.

அவரின் இன்னொரு சகோதரர் நிதியமைச்சிற்கு பொறுப்பாக காணப்படுவார்- அவர் ஜனாதிபதியின் படத்தை ஒவ்வொரு ருபாய் நோட்டிலும் அச்சிடுவார் அதன் மூலம் தனது சகோதரனை உண்மையான தேசப்பற்றாளனாக மாற்றுவார்.

மேலும் ஜனாதிபதி தனது உறவினர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாட்டினதும் தூதுவர்களாகவும் நியமிப்பார்,அவர்கள் தங்கள் ஜனாதிபதி எவ்வளவு தேசப்பற்று மிக்கவர் என தெரிவிப்பார்கள்.

ஆனால் மேடம் இவர்கள் அனைவரும் சில நாட்களிற்கு காத்திருக்கவேண்டும்.தற்போதைக்கு நாங்கள் அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டாரா என்பதை அறியவேண்டும்.

ஜிஆர் தி கிரேட் ஒருபோதும் அமெரிக்க பிரஜையாகயிருக்கவில்லை , அமெரிக்கா அதனை வழங்கியபோதும் அவர் நிராகரித்துவிட்டார் என நீங்கள் தெரிவித்தால் போதும்.

ஆனால் அமெரிக்க இராஜதந்திரிகள் பொய் சொல்லமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

தயவு செய்து அவர் தற்போது இலங்கை பிரஜை எனவும் - இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இன்னொரு இளம் ராஜபக்ச வரும் வரை -நாங்கள் இவரை இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம் எனவும் பொய் சொல்லவேண்டாம்.

கிரிபண்டா சில்வா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13