(இராஜதுரை ஹஷான்)

மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் ஒப்பந்தம் விவகாரத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

சஜித் பிரேமதாஸவின் கொள்கையினை  விட கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைகள் சிறந்தது அதன் காரணமாகவே ஆதரவு  வழங்குகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

மினுவாங்கொட நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச முறை கடன்களை மீள்செலுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் கடந்த நான்கரை வருடகாலமாக அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்கு பதிலாக  இறக்குமதி உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது இதன் காரணமாகவே தேசிய  கைத்தொழில்கள் , உற்பத்திகள் ஆகியவை அனைத்தும் இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் மத்தியில் நாடு அனைத்து தேவைகளுக்கும் கையேந்தும் நிலைமையினை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. இதன்  காரணமாக இன்று  அனைத்து சர்வதேச அமைப்புக்களும் நாட்டின் அனைத்து விடயங்களிலும்  அழுத்தம் பிரயோகிக்கின்றது.  பாரம்பரியமான தேசிய உற்பத்திகள் அனைத்தும் மீண்டும் புத்துணர்ச்சி செய்யப்படும்.

தேசிய பொருளாதாரத்தின் ஊடாக சுயமாக முன்னேற்றமடையும் வளங்கள் கொண்ட நாடு இன்று அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. நிதியமைச்சு  அரசாங்கம் அல்ல,  அமைச்சர்  மங்கள சமரவீர தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாட்டின் பாரம்பரிய தேசிய உரிமைகளை  பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு  வழங்க தீர்மானித்தேன்.

நாட்டுக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியின்  புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த போட்டி  நாட்டுக்காகவே இடம் பெறுகின்றது. தேசியத்தை  பாதுகாக்க அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றினைய வேண்டும் என்றார்.