தேர்தல் தினத்துக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு விசேட செய்தி எதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடமாட்டார் என்றும் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை வாக்களிப்பு முடிவடைந்த பிறகு மாலை 6 மணிக்கு அவர் மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என்றுதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பி.பி.சி. சிங்கள சேவைக்கு கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக இறுதி நேரத்தில் எந்தவொரு விசேட அறிக்கையையும் வெளியிடப்போவதில்லை என்று தங்களுக்கு ஜனாதிபதி சிறிசேன உறுதியளித்திருப்பதாகவும் தேசப்பிரிய கூறினார்.