(இராஜதுரை ஹஷான்)

தந்தையின் அரசியல் செயற்பாடுகளை  குறிப்பிட்டு பெருமிதம் கொள்ளும்  புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச, ரோஹன விஜேவீரவின் குடும்பத்தினரிடம் பகிரங்கமான மன்னிப்பு கோர வேண்டுமென் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாசவின் ஆலோசனையின்படியே மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர படுகொலை செய்யப்பட்டதாவும் சுட்டிக்காட்டினார்,

பொதுஜன பெரமுனவின்  காரியாலய தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபகஷவுக்கு எதிரான சேறுபூசும் நடவடிகைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 7000 டொன் தங்கநகைகளை கோத்தா கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.