(எம்.மனோசித்ரா)
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அவரை இரு தடவைகள் ஜனாதிபதியாக்கியதைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தையும் எனது ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவேன். தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை நாம் பொறுப்பேற்கின்றோம்.
எமது ஆட்சியின் கீழ் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதற்கேற்க வகைளில் முப்படை ,பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு என்பன பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.