கொழும்பு - சென்னைக்கான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான மேலும் 14 விமான சேவைகள் இன்று முதல் 6 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கொழும்பில் இருந்து சென்னைக்கான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்று 3 ஆம் திகதி சென்னைக்கு பயணமாகவிருந்த யு. எல். 128, யு. எல். 129, யு. எல்.  123, யு. எல். 124 ,விமான சேவைகளும் 4 ஆம் திகதி பயணமாகவிருந்த யு. எல்.  125,யு. எல். 126, யு. எல். 121, யு. எல். 122, யு. எல்.  127, யு. எல்.  128, யு. எல். 123, யு. எல்.  124 , விமான சேவைகளும் 5 ஆம் திகதி பயணமாகவிருந்த யு. எல். 125, யு. எல்.  126  ஆகிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான எம்.ஜே. 129, எம்.ஜே.130 ஆகிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.