100 கோடி கிளப்பில் இணைந்த கார்த்தி

By T Yuwaraj

12 Nov, 2019 | 03:25 PM
image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ‘தல’ அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, ராகவா லோரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 3’, தளபதி விஜய் நடித்த ‘பிகில் ’ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றன. 

இந்தப் பட்டியலில் தற்பொழுது கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி ’படமும் இணைந்திருக்கிறது. இந்த படம் வெளியாகி மூன்றாவது வாரத்தில் உலகம் முழுவதும் நூறு கோடி ரூபாயை வசூலித்து, இந்த  சாதனையை  எட்டியிருக்கிறது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் கிளப்பில் முதன் முறையாக நடிகர் கார்த்தி இணைந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

இந்திய மதிப்பில் முந்நூறு மில்லியன் ரூபாய் பட்ஜட்டில் தயாரிக்கப்பட்ட ‘கைதி ’படம் உலகமெங்கும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதால், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட பட மாளிகைகளும் அதிக அளவில் லாபம் ஈட்டியது என்கிறார்கள் திரை உலக வணிகர்கள்.

இதனிடையே முதன் முறையாக ‘கைதி ’படத்தின் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கும் கார்த்தி உற்சாகத்தில் இருக்கிறார். அத்துடன் அவர் தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ என்ற படத்திலும், இயக்குநர்  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘தம்பி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்