ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு கோத்தாபயவிற்கு உதவுதல்?

Published By: Rajeeban

12 Nov, 2019 | 12:20 PM
image

திசராணி குணசேகர

தமிழில் ரஜீபன்

என்;னிடம் இரண்டு குழுக்களே உள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட விரும்புவர்களும் பயங்கரவாதிகளுமே அவர்கள். நீங்கள் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடுபவர்களா?

-பிபிசி பேட்டியின் போது கோத்தாபய

2015 இல் பெரும்பான்மையான இலங்கையர்கள் ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தனர்.அந்த ஜனநாய சூழலை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக நாங்கள் வாக்களிக்கவேண்டுமா? அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதற்கு நாங்கள் விரும்பாமலே துணை போகப்போகின்றோமா?

2018 இல் இடம்பெற்ற சிறிசேன-மைத்திரி சதிமுயற்சியின் போது மகிந்த ராஜபக்ச சிறிசேனவிற்கு நீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து தேர்தல்களிற்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். சிறிசேன அந்த யோசனையை புறக்கணித்தார்.

ராஜபக்சாக்கள் ஜனநாயகம் குறித்து எந்த மதிப்பும் அற்றவர்கள்,அந்த சர்வாதிகார குடும்பத்தில் உள்ளவர்களில் கோத்தாபய போல சர்வாதிகாரி யாரும் இல்லை.

அவர் 17 ம் திகதி வெற்றிபெற்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் 2015 இல் நாங்கள் பெற்ற ஜனநாயகசூழலை அளிப்பதற்காகவும் இலங்கையை மீண்டும் சர்வாதிகாரத்தின் பிடியில் கொண்டுவருவதற்காகவும்; மிகவேகமாக செயற்படுவார்கள்.

தனியொரு குடும்பத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக இலங்கையின் வரலாற்றில் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன.இது ஒரு ராஜபக்ச கட்சி, சகோதரர்கள்,மகன்கள், சித்தப்பா உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ளனர்.அந்த கட்சியின் நிறம் கூட ராஜபக்சவின் சால்வையை நினைவூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

ராஜபக்சாக்கள் இலங்கையை மீண்டும் தங்கள் குடும்பத்தின் பிடியி;ல் கொண்டுவரும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த கட்சி  உருவாக்கப்பட்டது. அதன் இருப்பின் நோக்கமும் அதுவே.

அரசாங்கத்திற்குள் காணப்படும் இந்த அரசாங்கத்தின் நிர்வாண சக்கரவர்த்தியாக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தேர்தல் பிரச்சாரங்களே இதுவரையில் மிகவும் அமைதியானவையாக காணப்படுகின்றன.இதற்கு 2015 ஜனவரியில் இல் நாங்கள் உருவாக்கி 2015 ஆகஸ்டிலும்  அதன் பின்னர் 2018 ஒக்டோபர் மாதத்தில்  நாங்கள் காப்பாற்றிய ஜனநாயக மாற்றங்களே இதற்கு காரணம்.

கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றால் இதுவே இலங்கையின் வரலாற்றில்  இறுதி குருதிசிந்தப்படாத தேர்தலாக காணப்படும்.

இன்று எங்கள் முன்னாள் உள்ள தெரிவும்- 2015 இல் எங்கள் முன்னாள் காணப்பட்ட தெரிவு போன்றது.எங்கள் முன்னாள் உள்ள தெரிவு பிழையான ஜனநாயகத்திற்கும் திட்டமிடப்பட்ட சர்வாதிகாரத்திற்கும் இடையிலானது.

ஐக்கியதேசிய கட்சி வேட்பாளரின் தரம் குறித்து விவாதிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்டது.முதல்சுற்றிலேயே கோத்தாபய ராஜபக்ச தோற்கடிப்பதை உறுதிசெய்வதற்கு ஒரே வழியே உள்ளது அது சஜித்பிரேமதாசவிற்கு வாக்களிப்பதேயாகும்.

நாங்கள் ஜனநாயகம் குறித்து உண்மையாகவே தீவிர-அக்கறை கொண்டிருந்தால் இதனை தவிர வேறு வழியில்லை.

தீவிர அரசியல் சுத்ததன்மை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்குமா?

ஜனநாயக அரசாங்கத்தினால் மாத்திரம் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது,முழுமையான பாதுகாப்பான ஜனநாயகத்திற்கு ஜனநாயகத்தன்மை மிக்க எதிர்கட்சி அவசியம்.இதன் மூலம் மாத்திரமே ஜனநாயக தேர்தல்களால் ஜனநாயகத்;தை ஸ்திரப்படுத்த முடியும்

2015 ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தியது ஆனால் ஜனநாய எதிர்கட்சியை அதனால் உருவாக்க முடியவில்லை.

2019 இல் எங்களிற்கு அந்த வெற்றிடத்தை நிரப்பி எதிர்கட்சியை ஜனநாயக மயப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டால் அது ராஜபக்ச திட்டத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கும்,ராஜபக்ச சகோதரர்கள் மத்தியிலான மோதலிற்கான மெல்லிய அறிகுறிகள் ஏற்கனவே தென்படத்தொடங்கியுள்ளன.

அலவ மற்றும் ஹசல்கவில் இடம்பெற்ற பொதுஜனபெரமுனவின் பேரணிகளில் மகிந்தராஜபக்சவின் உரையை குழப்பமுயன்றனர். பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் உரைக்கு எதிர்ப்பு வெளியாவது ஒரு மாதத்திற்கு முன்னர் நினைத்து பார்க்க முடியாத விடயம்.

இது இன்று இடம்பெறுகின்றது – கோத்தபாய தோற்கடிக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்டால் பொதுஜனபெரமுன பல குழுக்களாக சிதறுண்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ராஜபக்சாக்கள் பலவீனமடைவது எதிர்கட்சிக்கான சூழலை ஒரளவிற்கு ஏற்படுத்தும்.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜேவிபி மகேஸ்சேனநாயக்க போன்ற சக்திகள் தென்பகுதி வாக்குகளில் குறிப்பிட்ட அளவினை பெறுவதற்கு உதவும்.இதன் மூலம் அவர்களால் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச்செய்ய கூடிய வலுவான எதிரணியாக மாறமுடியும்.

ஜனநாய அரசாங்கத்திற்குள் ஜனநாயக தன்மை மிக்க எதிரணி காணப்பட்டால் இலங்கையின் ஜனநாயகம் தப்பிபிழைக்கும்.

ஆனால் அனைத்தும் ஒரு விடயத்திலேயே தங்கியுள்ளது. கோத்தாபய தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே அது.

கோத்தபாய தேர்தலில் முன்னிலை பெற்றவராகவே நுழைந்தார் ஆனால் அந்த  முன்னிலை கடந்த சில வாரங்களில் பலவீனப்பட்டுள்ளது.

தமிழ் முஸ்லீம் வாக்குகள் கோத்தபாயவிற்கு எதிராக மாறுவதாலும்,சந்திரிகா பண்டாரநாயக்க கோத்தாபய ராஜபக்ச எதிர் சுதந்திர கட்சி அணிக்கு தலைமை தாங்க ஆரம்பித்துள்ளதாலும் - 2015 வெற்றி கூட்டணி போன்ற ஒன்று உருவாகியுள்ளது.

ஆனால் பாரிய வெற்றிடம் உள்ளது- ஜேவிபி தனித்து போட்டியிடுவதே அது.ஜேவிபியின் பிரசன்னமும் அதன் வெற்றிடமும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015 இல் ஜேவிபி தனித்து போட்டியிட்டிருந்தால் மைத்திரிபால சிறிசேனவினால் தெளிவான வெற்றியை பெற்றிருக்கமுடியாது.

2005 இல் ஜேவிபி தனித்து போட்டியிட்டிருந்தால் மகிந்த ராஜபக்சவினால் வெற்றிபெற்றிருக்க முடியாது.

ஜேவிபி தனது ஆதரவாளர்களை இரண்டாவது தெரிவாக சஜித்தை தெரிவு செய்யுமாறு கேட்குமா என்பதே  முடிவை தீர்மானிக்கும்.

ஜேவிபி ஏற்கனவே சமிக்ஞையை வெளியிட்டுள்ளது ஆனால் அது மாத்திரம் போதுமானதல்ல,ஜேவிபி தனது வேண்டுகோளை வெளிப்படையாக விடுக்கவேண்டும்,தெளிவாக இந்த வேண்டுகோளை விடுப்பதே அவசியம்,அன்னத்திற்கு வாக்களிப்பதும் ஏன் அவசியம் என்பதை ஜேவிபி தனது ஆதரவாளர்களிற்கு தெளிவுபடுத்தவேண்டும்.

இரண்டாவது தெரிவை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதே ஜேவிபி தப்புவதற்கும் -வலுவான எதிர்கட்சியாக மாறுவதற்கும் அவசியமானதாகும்.

2014 இல் கோத்தபாய ராஜபக்சவின் பெயரில் வெளியான பிரிஸ்ம்  சஞ்சிகையின் கட்டுரையொன்றில் இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தான விடயங்கள் குறித்த பட்டியல் காணப்படுகின்றது. அதில் இரண்டாவதாக மற்றைய தீவிரவாத குழு உருவாவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்திற்கான விளக்கம்- ஜேவிபியே அந்த ஆபத்து என்பதை வெளிப்படுத்துகின்றது.

கடந்த கால கிளர்ச்சிகளுடன் தொடர்புபட்ட தீவிரவாத குழுக்களின் எஞ்சிய உறுப்பினர்கள் உள்ளனர்,சிலர் மக்களை தங்கள் கடந்தகால நோக்கங்களை நோக்கி அணி திரட்ட முயல்கின்றனர்,இந்த குழுக்களில் சில விடுதலைப்புலிகளின் முகவர்களுடன் உறவுகளை ஏற்படுத்தியுள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது,மாணவர்களை தீவிரவாத மயப்படுத்தி வெவ்வேறு கோசங்களின் அடிப்படையில் அவர்களை வீதியில் இறக்க இவர்கள் முயல்கின்றனர் என அந்த கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி இரண்டாவது தெரிவாக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கோரவிட்டால்,அது கோத்தாபய ராஜபக்சவின் வெற்றிக்கு வழிவகுக்கும் அதனால் ஜேவிபி தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தான சக்தி என்ற அடிப்படையில் வேட்டையாடப்பட்டு தலைமறைவாகவேண்டிய நிலையேற்படலாம்.

ஜேவிபியின் தவறான சுத்தமான அரசியல்  என்ற வாதம் காரணமாக கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறுவார்,அதன் பின்னர் அவர் தனது முதல்பலியை ஜேவிபியிலிருந்தே தெரிவு செய்வார்.

அனுரகுமார திசநாயக்கவின் ஆக்ரோசமான உரை, வேலைநிறுத்த போராட்டம்,எதிர்ப்பு பேரணி ஆகியவற்றில் எதனையும் கோத்தாபய தனது நடவடிக்கைக்கு பயன்படுத்துவார்.

2019 நவம்பர் 16 ற்கு பின்னர் என்ன இடம்பெறலாம் என்பதற்கு ரதுபஸ்வல 2013ஒரு முன்னோட்டம்.

ஒரு தொழிற்சாலை சட்டங்களை புறக்கணித்து நிலத்தடி நீரை மாசுபடுத்தியது. மக்கள் சுத்தமான குடிநீரை கேட்டு போராடினார்கள்.அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடவில்லை.நீர் மாத்திரமே அவர்களது கரிசனைக்குரிய விடயம்.ஆனால் அந்த தொழிற்சாலையின் முகாமமையாளர்கள் ராஜபக்சாக்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள், ராஜபக்சாக்கள் இதனை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார்கள்,முழுமையான ஆயுதங்களுடன் இராணுவம் அனுப்பபட்டது,பிரிகேடியர் ஒருவர் அதற்கு தலைமை தாங்கினார்.மூவர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கோத்தாபயவின் முதல் நடவடிக்கையாக 2015 இல் உருவாக்கப்பட்ட ஜனநாயக தளத்தை அழிப்பதே காணப்படும்.

2020 நாடாளுமன்ற தேர்தல்கள் மோசமான- ஜனநாயகமற்ற சூழலில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் முயற்சி செய்வார்கள்.

ஐக்கியதேசிய கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ராஜபக்சாக்களை  ஏற்றுக்கொள்ளாதவர்களும்,ஜேவிபியினரும் இலக்குவைக்கப்படுவார்கள்.

அரசமைப்பு புறக்கணிக்கப்பட்டு சட்டங்கள் மீறப்படும்.நாடாளுமன்றம் இடம்பெறும்வேளையில் வாக்காளர்களிற்கு ஒரே தெரிவே காணப்படும்.

கோத்தாபய தானே இலங்கை என நினைக்கின்றார். என்னை காயப்படுத்துவதன் மூலம் நாட்டை காயப்படுத்துகின்றீர்கள் என பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவர் தெரிவித்தார்.

நாடு தனது இறும்பு பிடிக்காக ஏங்குகின்றது என அவர் நினைக்கின்றார்.

அவரை சூழ எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொதுமக்களை  சிறந்த  பிரஜைகளாக மாற்றுவது குறித்தும்- உரிமைகள் உள்ள தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றுவது குறித்தும் கனவு காணும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் வர்த்தக பிரமுகர்களும் காணப்படுகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச அவர்களை பொறுத்தவரை அந்த சொர்க்கத்திற்கு அவர்களை இட்டுச்செல்லக்கூடியவர்.

கோத்தபாய ராஜபக்ச அவரது சகோதரர்களை விட பொறுமையற்றவர்,அவரது பார்வையில் ஒவ்வொரு முரண்பாடும் ஆபத்தானது,அவர் கேள்விகள் கேட்கப்படுவதையோ ஆர்ப்பாட்டங்களையே விரும்புவது இல்லை.எந்த அதிருப்திக்கும் வன்முறையே அவரது முதல் பதில்.அவரது தீவிரவாத தன்மை வன்முறைக்கும் பதில் வன்முறைக்கும் வழிவகுக்க கூடியது, அரசியல் ஸ்திரதன்மையை பாதித்து பொருளாதார வளர்ச்சியை பின்நோக்கி  நகர்த்தக்கூடியது.

தங்கள் சுதந்திரத்தை பாதுகாப்பிற்காகவும் ஆதாயத்திற்காகவும் விட்டுக்கொடுக்க தயாரானவர்களிற்கு இரண்டுமே கிடைக்காமல் போகலாம்.

தப்பிப்பிழைக்க நினைக்கும் ஜனநாயகம்

-

கோத்தாபய கற்பிதங்களும் யதார்த்தமும்

நாட்டை ஆள்வதற்கு வேறு திறமைகள் அவசியம்.

ஆட்சி குறித்த முக்கிய விடயங்களில் அவரிற்கு அறிவுபோதாததன் காரணமாகவே அவர் விவாதங்களை தவிர்க்கின்றார்.

இது இலங்கையின் பொருளாதா எதிர்காலத்திற்கான ஆபத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

அவரது முதலாவதும்- இதுவரை இடம்பெற்றதுமான செய்தியாளர் மாநாட்டில் கடன் சுமையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என கோத்தாபயவிடம் கேள்வி எழுப்பபட்டது.அவர் அந்த கேள்வியை தவிர்த்தார்.

அவரிற் நிச்சயமாக கடன்நெருக்கடி குறித்து எதுவும் தெரியாது,அவர் அது குறித்து கவலைப்படுவதும் இல்லை.தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதியை எவ்வாறு பெறப்போகின்றார் என்பது தெரியாதவராக அவர் காணப்படுகின்றார்.சட்டத்தை மீறலாம் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என அவர் நினைப்பது போன்று தன்னிடம் இல்லாத நிதியை தான் செலவிடலாம் என அவர் கருதுகின்றார்.

சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கம் கடன் நெருக்கடியை தவறாககையாண்டது- மோசமாக்கியது ஆனால் அது அவர்களின் உருவாக்கம் இல்லை,அது ராஜபக்சாக்களி;ன் பாரம்பரியம்,தங்களின் புகழi பரப்பும் பலனற்ற திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2009 முதல் 2014 முதல் பெறப்பட்ட உயர் வட்டி கடன்களே  இதற்குகாரணம்.இதன் காரணமாக அரசாங்கத்தின் கடன் மூன்று மடங்காகவும் வெளிநாட்டு கடன் பல மடங்காகவும் அதிகரித்தது.

ராஜபக்சாக்கள் அரசாங்க நிறுவனங்களை பயன்படுத்தி அவற்றின் சார்பில் கடன்களை பெற்றனர்.

ஜனாதிபதி கோத்;தாபய தனது அர்த்தமற்ற முடிவுகளிற்காக இந்த நடவடிக்கையை பின்பற்றுவார்,நாங்கள் வங்குரோத்து நிலையை அடையும் போது சீனா எப்போதும் காப்பாற்ற வரும்.

அரசியல் எதிரணியினரையும் அதிருப்தியையும் எதிர்கொள்வதற்கு புதிய சட்டங்கள் அறிமுகமாகும், தங்களுடைய கடந்த கால அரசாங்கத்தில் தங்களால் நிறைவேற்ற முடியாத சட்டங்களையும் அவர்கள் அறிமுகப்படுத்தலாம்.

பௌத்த சாசன அமைச்சிற்கு தான் விரும்பும் எந்த நிலத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கிய புனித பகுதி சட்டத்தினை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்வோம், 2013 இல் ராஜபக்ச அறிமுகப்படுத்தவதற்கு திட்டமிட்டு தோல்வியடைந்த ஊடகவியலாளர்களிற்கான ஒழுக்காற்று விதிமுறைகளை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்வோம்.

மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தின் அடிப்படை உரிமைகளாக மாற்றப்படும்.

2015 இல் பெரும்பான்மையான வாக்காளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை புரிந்துகொண்டனர்,அரசாங்கத்தின் முட்டாள்தனத்தினால் அந்த தெளிவு குறைவானதாக காணப்படுகின்றது.2015 இல் காணப்பட்ட நம்பிக்கையும் உற்சாகமும் அவநம்பிக்கையும் அலட்சியமுமாக மாறியுள்ளன.

நாங்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும்  எவ்வளவிற்கு வெறுத்தாலும்- விரும்பாவிட்டாலும் அதன் பாதிப்புகளில் இருந்து தப்பமுடியாது.

நாங்கள் 16 ம் திகதி தவறான தெரிவினை மேற்கொண்டால் அது எங்கள் வாழ்க்கையின் நுண்ணிய பகுதிகளை கூட பாதிக்கலாம்.

இதன் காரணமாக 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாயவிற்கு வாக்களிக்காமல் இருப்பது மாத்திரம் முக்கியமல்ல அவரிற்கு எதிராக வாக்களிப்பதும் அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22