பொலி­­விய ஜனா­தி­பதி ஈவோ மொராலஸ் தனது பத­வியை இராஜினாமா செய்­துள்ளார்.

கடந்த மாதம் சர்ச்­சைக்­கு­ரிய தேர்­தலில் அவர் போட்­டி­யிட்­ட­தை­ய­டுத்து அந்­நாட்டில் அதி­க­ரித்­துள்ள குழப்­ப­நி­லை­யை­யொட்­டியே அவ­ரது பதவி விலகல் இடம்­பெற்­றுள்­ளது.

 கடந்த ஒக்­டோபர் 20 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலில் குழறுபடிகள் இடம்­பெற்­றுள்­ளமை தெளிவாக தெரி­வதால் அந்தத் தேர்தல் பெறு­பே­று­களை வலி­தற்­ற­வை­யென அறி­விக்க வேண்டும் என சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களின் குற்றச்­சாட்­டுகள் குறித்து ஒப்­புக்­கொண்­டுள்ள மொராலஸ், நாட்டின் தேர்தல் அமைப்பை முழு­மை­யாக சீர­மைத்த பின்னர் புதிய தேர்­த­லுக்கு அழைப்பு விடுப்­ப­தற்­கான தனது நோக்கம் குறித்து அறி­விப்புச் செய்­துள்ளார்.

ஆனால் அர­சி­யல்­வா­திகள், இரா­ணுவம் மற்றும் பொலிஸ் தலை­வர்கள் ஆகியோர் அர­சி­ய­லி­லி­ருந்து அவர் விலக வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். ஈவோ மொரா­லஸின் சில நண்­பர்கள் கடந்த வார ஆரம்­பத்தில்  தாக்­கப்­பட்­டனர். அவர்­க­ளது வீடு­க ­ளுக்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களால் தீ வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் நாட்டு மக்­க­ளுக்கு ஈவோ மொராலஸ் தொலைக்­காட்சி மூலம் ஆற்­றிய உரையில், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் சகோ­த­ரர்­க­ளையும் சகோ­த­ரி­க­ளையும் தாக்­கு­வ­தையும் சொத்­துக்­களை  தீவைத்துக் கொளுத்­து­வ­தையும் நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார்.

பொலி­விய ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிப்­ப­தற்கு ஒரு­வ­ருக்­குள்ள கால வரை­ய­றையை  முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய தீர்­மா­னத்தை எடுத்­த­தை­ய­டுத்து கடந்த ஒக்­டோபர் மாதம்­ இ­டம்­பெற்ற தேர்­தலில் ஈவோ மொராலஸ் நான்­கா­வது தட­வை­யாக போட்­டி­யிட்­டி­ருந்தார்.