பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் பக்­கிங்ஹாம் மாளி­கையும் அத­னுடன் இணைந்த கட்­டி­டங்­களும்  பெருந்­தொ­கை­யான பணி­யா­ளர்­களால் எப்­போ­தும் கண்ணைக் கவரும் வகையில் சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது அனை­வரும் அறிந்­த­தாகும்.

இந்­நி­லையில் எலி­ஸபெத் மகா­ரா­ணி­யா­ருக்கு சாதா­ரண மக்கள் எதிர்­கொள்­வதைப் போன்ற  எலித் தொல்லை பிரச்­சினை எதுவும் இருக்­காது என்று எவ­ரா­வது நினைத்­தால் ­அது தவறு என்­பதை அண்­மையில் இடம்­பெற்ற சம்­பவம் நிரூ­பித்­துள்­ளது.

மகா­ரா­ணி­யா­ருடன் சந்திப்பை மேற்­கொள்ள வரும் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­காக பக்­கிங்ஹாம் மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்ள சிற்­றுண்­டிச்­சா­லையை பரி­சோ­திக்க அண்­மையில் சென்ற பரி­சோ­த­கர்கள் அங்கு எலிப் புழுக்­கைகள் இருப்­பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்­துள்­ளனர். 

இது தொடர்பில் நேற்று திங்­கட்­கி­ழமை தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து அந்த சிற்­றுண்­டிச்­சா­லைக்கு எலி­களை ஒழிப்­ப­தற்கு சுகா­தார நிபு­ணர்கள் குழு­வொன்று வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் அங்கு பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு எலி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து பயிற்சி வழங்­கு­வ­தற்கும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

மகா­ரா­ணி­யாரை சந்­திப்ப­தற்கு வரும் சுற்­று­லா­ப் ப­ய­ணி­க­ளிடம் அந்த சிற்­றுண்­டிச்­சா­லையில் அமர்ந்­தி­ருந்து தேநீர் அருந்தி சிற்­றுண்­டி­களை உண்­ப­தற்கு அனுமதிக் கட்டணமாக ஒருவருக்கு 49 ஸ்ரேலிங் பவுண் வீதம் அறவிடப்படுகிறது.