செல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில்  எளிதில் வெற்றி பெற்­றது.

லா லிகா கால்­பந்து லீக்கில் நேற்­று முன்­தினம் நள்­ளி­ரவு நடை­பெற்ற ஆட்­டத்தில் புகழ்­பெற்ற கழக அணி­யான பார்­சி­லோனா, செல்டா விகோ அணியை எதிர்­கொண்­டது.

சொந்த மைதா­னத்தில் நடை­பெற்ற ஆட்­டத்தில் பார்­சி­லோனா ஆதிக்கம் செலுத்­தி­யது. 23-ஆவது நிமி­டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்தார். 42ஆ-வது நிமி­டத்தில் செல்டா விகோ ஒரு கோல் அடித்­தது. இதனால் 1–-1 என சம­நி­லை யில் இருந்­தது.

முதல் பாதி நேர ஆட்டம் முடி­வ­டை­வ­தற்கு சற்று முன் (45+1) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் பார்­சி­லோனா முதல் பாதி நேரத்தில் 2–-1 என முன்­னிலை பெற்­றது.

2ஆ-வது பாதி நேர ஆட் டம் தொடங்­கி­யதும் 3-ஆவது நிமி­டத்தில், அதா­வது ஆட்­டத்தின் 48 ஆவது நிமி­டத்தில் மெஸ்ஸி ஹெட் ரிக் கோலை பதிவு செய்தார். 85ஆ-வது நிமி­டத்தில் செர்­ஜியோ பஸ்­குயட்ஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4–-1 என வெற்றி பெற்றது.