பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூ.1500, ரூ.1000 சம்­பள வாக்­கு­றுதி: சஜித், கோத்தா தெளி­வு­ப­டுத்த வேண்டும்

Published By: J.G.Stephan

12 Nov, 2019 | 11:20 AM
image

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் மலை­யக மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து வரு­கின்­றனர். எனினும் இழு­பறி நிலைக்­குள்­ளாகி வரும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் மீண்டும் ஒரு ஏமாற்­றத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­காது இதி­லுள்ள தெளி­வுத்­தன்­மை­களை மக்­க­ளி­டத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

பசறை, லுணு­கலை மற்றும் கோணக்­கலை ஆகிய பெருந்­தோட்ட புறங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் தாம் இவ்­வி­ட­யத்தில் குழப்­ப­ம­டைந்­தி­ருப்­ப­தா­கவும் எவ்­வாறு இத்­தொ­கை­யினை தரப்­போ­கின்­றனர் என்று புரி­யா­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ள அதே­வேளை தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் தமது கோரிக்­கையை ஏற்று நிலைப்­பா­டு­களை பகி­ரங்­க­மாக அறி­விக்­கு­மாறு குறிப்­பி­டு­கின்­றனர்.



இது தொடர்பில் மேற்­படி பிர­தேச மக்­க­ளி­டத்தில் வின­வி­ய­போது அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்­றுத்­த­ரு­வ­தாக 2015 ஆம் ஆண்டு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. எனினும் அந்த தொகை இது­வ­ரையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிட்­ட­வில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற கூட்டு ஒப்­பந்­தத்தின் போதும் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று மேலும் 50 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கப்­போ­வ­தா­கவும் கூறினர். அமைச்­ச­ர­வை­யிலும் இதற்­கான அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­ற­தா­கவே கூறப்­பட்­டது. ஆனாலும் இது­வ­ரையில் அந்த 50 ரூபா கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அது­மாத்­தி­ர­மன்றி தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு முற்­பணத் தொகையில் மேலும் 5000 ரூபா பெற்­றுத்­த­ரப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­தனர். பின்னர் அதுவும் கிடைக்­க­வில்லை.

இவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­ப­டு­வது புதி­தான விட­ய­மல்ல. கால­கா­ல­மாக தோட்டத் தொழி­லா­ளர்கள் அனைத்து தரப்­பி­ன­ராலும் ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர் என்­பதை எவரும் மறுப்­ப­தற்­கில்லை.

இவ்­வா­றான நிலையில் தற்­போது 1500 ரூபா என்றும் 1000 ரூபா என்றும் பிர­தான வேட்­பா­ளர்கள் கூறு­கின்­றனர். இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஆகிய இரு தரப்­புக்­க­ளுமே மேற்­படி வாக்­கு­று­தி­க­ளுக்கு துணை நிற்­கின்­றன.

1500 ரூபாவை பெற்றுத் தரு­வ­தாக கூறும் புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் அதனை எவ்­வாறு பெற்­றுத்­தரப் போகிறார். அண்­மைக்­கா­ல­மாக 50 ரூபா­வுக்கே அங்­கீ­காரம் கிடைக்­காத பட்­சத்தில் ஒட்­டு­மொத்த தொழி­லா­ளர்­க­ளுக்கும் 1500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக இருப்பின் அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் இதுவும் ஒரு வகையில் தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்றும் வாக்­கு­று­தியா என்­பது புரி­ய­வில்லை.

அதே­போன்று மறு­பு­றத்தில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்­த­பாய 1000 ரூபா பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறு­கிறார். ஆனாலும் கூட்டு ஒப்­பந்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது 1000 ரூபாவை வழங்­கு­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது. அத்­தோடு அடுத்த கூட்டு ஒப்­பந்­தத்­தின்­போது 1000 ரூபா பெற்­றுத்­த­ரப்­படும் என்று கோத்­த­பாய கூறு­வா­ரானால் அது இயல்­பா­கவே இடம்­பெறும் 1000 ரூபா அதி­க­ரிப்­புக்கு பெயர் போட்­டுக்­கொண்­ட­தா­கவே ஆகி­விடும்.

ஏனெனில் அந்த கூட்டு ஒப்­பந்­தத்தின் போது தோட்டத் தோழி­லா­ளர்­களின் நாட் சம்­பளம் 1000 ரூபாவை எட்­டி­விடும் என்­பது திண்­ண­மாகும். ஆகவே கோத்­த­பாய ராஜபக் ஷ கூறு­கின்ற 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தேர்தல் முடி­வுற்­றதும் பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளிக்க வேண்டும். அப்­படி இல்­லாது போனால் இதுவும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர் என்பது புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இம்முறையேனும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றாது உண்மையானதும் இயலுமானதுமான வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்