(செ.தேன்மொழி)

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதி ஜூட் சிறிமன்ன , ஜயமஹ என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடைச் சிறைக்கைதிகள் இருவர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கட்டிடத் தொகுதி ஒன்றில் இன்று ஏறிய கைதிகள் இவரும் முன்னெடுத்த ஆர்பாட்டத்தினால் சிறைச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இராஜகிரிய - ரோயல் பார்க் வீட்டு தொகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவரை கொலை செய்தமை தொடர்பிலே விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்த ஜூட் சிறிமன்ன ஜயமஹ என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த கைதிகள் இருவரும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இன்று மாலை வரை இவர்கள் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.