இறைவனின் மிக அழகிய படைப்புகளில் ஒன்று பெண் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் கோடியில் ஒரு பெண்மணிக்கு தான் அழகுடன் சேர்ந்து, குயில் போன்ற குரல் வளமும் இருக்கும். அதை உணர்த்தும் வண்ணமாக திகழ்பவர் நடிகை ஆண்ட்ரியா. குறுகிய காலத்தில் பல வெற்றி கனிகளை சுவைத்த இவர், மே 27 ஆம் திகதி வெளியாகும் சிலம்பரசனின் இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடிப்பார் என்று பெரும் அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. டி ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது. சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும், இது நம்ம ஆளு திரைப்படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றும் கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா. "படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகி விடுவார். அவருடைய திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன். எதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இது நம்ம ஆளு திரைப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு திரைப்படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார்.
மொத்தத்தில் இது நம்ம ஆளு திரைப்படம் ஆண்ட்ரியாவின் நடிப்பு திறன், அழகு, என அவருக்குள் குவிந்துக் கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM