(எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் நடத்தப்ப்ட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வேன் கடத்தல்களின் போது தான் சாரதியாக கடமையாற்றியதாக கூறி, பொது மகன் ஒருவர் வெளியிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பிரதானியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பூரண அவதானம் திரும்பியதாகவும், அதன்படி ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபரங்கள், ஒலி மற்றும் ஒளிபரப்புக்களின் பிரதிகளுடன் அது தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனயவுப் பிரிவின் பிரதனை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். 

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.