(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கலந்து கொண்ட அலி சப்ரி , ஹரின் பெர்னாண்டோவும் அவரது தந்தையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்து பொது மக்கள் 300  பேர் உயிரிழக்க காரணமாகினார் என குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இதற்கு எதிராகவே அவர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.