(செ.தேன்மொழி)

நாளையு மறுதினத்துடன் நிறைவடைய உள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் இரண்டு நாட்கள் அதாவது எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எவ்வாறு முகநூலில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தி கையாளப் போகுறீர்கள் எனவும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் எனவும் பெப்ரல் அமைப்பு முகநூல் நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

32 வருடங்களாக இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக மக்கள் செயற்பாடு அமைப்பான பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி முகநூல் நிர்வாகியிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தேர்தல்கள் சட்டத்தில் தேர்தல் இடம்பெறவுள்ள தினத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ஓய்வுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்ட 48 மணிநேரமும் அமைதிகாலமாக அனுசரிக்க வேண்டுமெனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வமைதி காலத்தில் முகநூலில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தி கையாளுமாறு முகநூல் நிர்வாகியை கேட்டுக் கொள்கிறேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.