(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
லக்னோ டெஸ்ட் தொடரில் ஆட்ட நிர்ணயம் விவகாரத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொகுகே மற்றும் இலங்கை அணியின் அப்போதைய தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவிற்கும் இடையில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அர்ஜுன - அரவிந்த இருவரும் குற்றவாளிகள் என காமினி லொகுகே எம்.பி கூறிய நிலையில் அவ்வாறு குற்றம் செய்யவில்லையெனவும் மீண்டும் விசாரணை நடத்துங்கள் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை கூடிய விசேட பாராளுமன்ற அமர்வில் விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறுகையில்,
காமினி லொகுகே கூறியதை போல அவ்வாறான குற்றச்சாட்டில் தொடர்புபட்ட சகலரும் தண்டிக்கப்பட்டனர். எனக்கும் அரவிந்த டி சில்வாவிற்கும் கூட (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபையினால் விசாரணைகள் நடத்தப்பட்டது. டெஸ்மன்ட் பெர்னாண்டோ என்பவரே இந்த விசாரணைகளை செய்தார்.
இறுதியாக சி.பி.ஐ அறிக்கையையும் கருத்தில் கொண்டு நடத்திய விசாரணையில் கூட நானும் அரவிந்தவும் விடுவிக்கப்பட்டோம். குப்தா என்ற நபர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவ்வாறான நபரை சந்தித்ததும் இல்லை.
என்னிடம் மூன்று மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டது. இறுதியாக நாம் விடுவிக்கப்படம். எனக்கும் அரவிந்த டி சில்வாவிற்கும் எதிராக கூறும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்துங்கள். (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபை அனுப்பிய கடிதங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் நாம் சமர்ப்பிக்கின்றோம். எம்மீது குற்றம் சுமத்தும் அனைவருக்கும் ஒரு பிரதியையும் அனுப்பவேண்டும் என பாராளுமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM