சூர்யா நடிப்பில் தயாராகிவரும் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘காப்பான்’ படத்தின் வணிக ரீதியிலான வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா, மாறா என்ற கதாபாத்திரத்தில் துடிப்புள்ள இளைஞராக நடிக்கிறார். இந்த படத்தின் கதை, இந்திய விமான படை பிரிவில் பணியாற்றிய கப்டன் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற பல சுவாரசியமான சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. 

இந்திய விமான போக்குவரத்து துறையில் ஜி ஆர் கோபிநாத்தின் வருகைக்கு பின்னர் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைக்கதையில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, விவேக் பிரசன்னா, கருணாஸ், ஜேக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேஷ் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சூர்யா ,தன்னுடைய கட்டுடலை ஆகாயத்தில் பறப்பதுபோல் காட்டியிருப்பது ரசிகர்களை உற்சாக படுத்தியிருப்பதுடன், அதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.