ரஷ்யாவில் நடைபெற்ற ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில், 9க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி ரஷ்ய ரோபோக்கள் வெற்றி பெற்றன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆண்டுதோறும், ரோபோக்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, ‘ஆசிய பசிபிக்- 2019’ என்ற பெயரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. 

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன. இந்த ரோபோக்கள் ஆடி அசைந்து பந்து விளையாடிய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

அத்துடன், மனிதர்களைப் போன்றே ஒன்றுக்கொன்று தள்ளி விட்டுக்கொண்டு கோல் போடுவதில் முனைப்பு காட்டியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 9க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி, ரஷ்ய ரோபோக்கள் வெற்றி பெற்றன.