லக்னோ டெஸ்ட் ஆட்ட நிர்ணயம் விவகாரம் : அர்ஜுன , அரவிந்த குற்றவாளிகள் என்கிறார் காமினி லொகுகே

Published By: R. Kalaichelvan

11 Nov, 2019 | 03:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

லக்னோ டெஸ்ட் தொடரில் ஆட்ட நிர்ணயம் விவகாரத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை  அமைச்சர் காமினி லொகுகே மற்றும் இலங்கை அணியின் அப்போதைய தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன  ரணதுங்கவிற்கும் இடையில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அர்ஜுன - அரவிந்த இருவரும் குற்றவாளிகள் என காமினி லொகுகே எம்.பி கூறிய நிலையில் அவ்வாறு குற்றம் செய்யவில்லையெனவும் மீண்டும் விசாரணை நடத்துங்கள் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை கூடிய விசேட பாராளுமன்ற அமர்வில் விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் தற்போதைய எதிரணி பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொகுகே தெரிவிக்கையில்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த ஆரம்ப காலங்களில் இதனை கட்டுப்படுத்த (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபைக்கென்ற சட்டம் ஒன்றும் இருக்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் சி.பி.ஐ எனப்படும் விசாரணைப்பிரிவு நீண்ட விசாரணையின் பின்னர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதாவது லக்னோ டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்று நடந்தது. இதில் சூதாட்டத்தில் ஈடபட்டதாக பாகிஸ்தானிய வீரர் சலீம் மலிக், இங்கிலாந்தின் வீரர் அலக்ஸ் ஸ்டுவர்ட், நியுசிலாந்தின் வீரர் மார்டின் க்ரோ, இந்திய வீரர் அசாருதின் ஆகியோரும் இலங்கையின் இரண்டு வீரர்களும் மாட்டிக்கொண்டனர்.

குப்தா என்ற இந்திய நபர் ஒருவரின் மூலமாக பணம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபையிடம் அப்போதும் இது குறித்து ஆராய சட்டம் இருக்கவில்லை.

ஆனால் இந்திய கிரிக்கெட் சபையின் மூலமாக குறித்த சி.பி.ஐ அறிக்கையை வைத்துகொண்டு குறித்த வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை நடத்தி குறித்த இரண்டு வீர்கள் குற்றம் செய்யவில்லை என கூறவில்லை.

எனினும் (ஐ.சி.சி) சர்வதேச கிரிக்கெட் சபை சட்டம் இல்லாத காரணத்தினால் ஐ.சி.சிக்கு அமைய தவறு என சட்டமாக்கப்படாத காரணத்தினால் இது தவறில்லை என்றே இலங்கை கிரிக்கெட் சபை கூறியது.

எவ்வாறு இருப்பினும் இவர்கள் இருவரும் குற்றவாளிகள்  என்பதே உண்மை.  விளையாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் கடுமையான விளையாட்டு சட்டங்களை கொண்டுவர வேண்டும். கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் அல்ல சகல விளையாட்டுகளிலும் இவ்வாறான சட்டங்களை கொண்டுவர வேண்டும். கள்ளர்களை விளையாட்டில் இருந்து நீக்கி விளையாட்டுத்துறையை தூய்மைப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05