(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக விசேட பாராளுமன்ற அமர்வுக்கான அழைப்பை விடுத்த பிரதமரே சபைக்குவரவில்லை. அவர் வீடுசெல்வதற்கு தயாராகின்றாரா தெரியவில்லை. என்றாலும் அவர் சபைக்கு வருகை தராமல் இருப்பது முறையில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பாமாகியது. 

விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மற்றும் தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படும்போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே தினேஸ்குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.