விளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கம் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று இடம்பெற்றது.

இதற்கு அமைவாக இன்று காலை 11.30 இற்கு பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஆரம்பமாகியது.

விளையாட்டுத்துறை தொடர்பிலான தவறுகளை தடுக்கும் திருத்த சட்டமூலம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்தக கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம்  விளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அது எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.