பாம்பு தீண்டிய கிராம அலுவலரின் மகன் உயிரிழப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 01:20 PM
image

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று10.11.2019 இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .

 நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் உறங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர் வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனப் பாம்பு ஒன்றை தந்தை அடித்து கொன்றுள்ளார்.

இதன் பின்னர் சிறுவன் மீண்டும் உறக்கத்துக்கு சென்றுவிட்டார் பின்னர் அதி காலையில் மகனை எழுப்பியபோது மகன் நினைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்துள்ளனர் இதன் பின்னர் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் குறித்த சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

 குறித்த மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் என்பது குறிப்பிடதக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்