உலகிலேயே மிகவும் வயதான தம்பதியென்ற பெருமையை அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத் தைச் சேர்ந்த ஜோன் ஹென்டெர்ஸனும்(106) சார்லொட்டும் (105 வயது) பெறுகின்றனர்.

கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் திராவிஸ் பிராந்தியத்தில் வாழும் இந்த தம்பதியை உலகின் மிகவும் வயதான தம்பதியாக அங்கீகரித்து சான்றிதழை வழங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தமது 80 ஆவது ஆண்டு திருமணநாளைக் கொண்டாடவுள்ளனர்.

உங்கள் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கும் காரணம் என்ன என ஜோனிடம் வினவப்பட்ட போது, ''வாழ்வை மிதமாக வாழ்ந்து வாழ்க்கைத் துணையுடன் சுமுகமாக இருங்கள்'' என அவர் சுருக்கமாக பதிலளித்தார்.
1934 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் கால்ப்பந்தாட்ட குழுவுக்கான காவலராக பணியாற்றிய ஜோனும் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பயிற்சிக்கல்வியை மேற்கொண்ட சார்லொட்டும் ஒருவரையொருவர் முதன்முதலாக சந்தித்திருந்தனர். காலப்போக்கில் அவர்களிடையே காதல் மலர்ந்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.
