சிச்சுவான் நகரில் வசிக்கும்  பருமனான ஜோடி ஒன்று, தமக்கு உடலுறவில் ஈடுபட முடியவில்லை எனவும் இதனால் தாம்  உடல் பருமனை அறுவைசிகிச்சை சிகிச்சை மூலம் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ள இருவருக்கும் இப்போது 30 வயதாகின்றது. லின் யூ மற்றும் டெங் யாங் இருவரும் ஒருங்கிணைந்து 400 கிலோகிராம் எடையாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெங்,   தனது அதிக பருமனால் உடலுறவு வாழ்க்கை ஒரு கனவாகவே உள்ளது. இதனால், அக் கனவை நனவாக்கிக்கொள்ள இம்முடிவுக்கு வந்துள்ளோம்.தங்களின் கனவை நனவாக்கிக்கொள்ள தமது சொந்த ஊரில் இருந்து சங்குசதூங்கில் உள்ள வைத்தியசாலையில் எடைக்குறைப்பு சத்திரசிகிச்சை செய்துக்கொள்ள வந்துள்ளனர். 

அங்கு மேற்கொண்ட சோதனையில், லின் யூ 163 சென்ரிமீற்றர் உயரமும் 160 சென்ரிமீற்றர் இடுப்பு சுற்றளவையும் கொண்டுள்ளதோடு, அவரின் மனைவி டெங் யாங் 160 சென்ரி மீற்றர் உயரமும் 170சென்ரி மீற்றர் இடுப்பு சுற்றளவையும் கொண்டுள்ளார்.

தங்களின் அறுவைசிகிச்சைக்கு பின் மீண்டும் திருமணம் செய்து தங்களின் கனவினை நனவாக்கிக்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தனர்.