ரிஷாத்தின் விருப்பத்துக்கு விளையாட அனுமதியுங்கள் - ரோகித்

Published By: Vishnu

11 Nov, 2019 | 11:50 AM
image

களத்தில் செய்த தவறுகளை வைத்து ரிஷத் பந்த்தை யாரும் முடிவு செய்ய வேண்டாம், கணிக்கவும் வேண்டாம். அவரின் விருப்பத்துக்கு துடுப்பெடுத்தாடவும் விக்கெட் காப்பிலும் ஈடுபட அனுமதியுங்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் பணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த தோனி உலகக் கிண்ண போட்டிக்குப் பின் விளையாடாமல் இருந்து வருகிறார். 

தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்தால், துடுப்பாட்டத்திலும், விக்கெட் காப்பிலும் சிறந்து விளங்கும் வீரரைத் தயார் செய்யும் முனைப்பில் இளம் வீரர் ரிஷத் பந்த்துக்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அதிகமான வாய்ப்பு வழங்கி வருகிறது.

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷத் பந்த் அதன்பின் பெரிய அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும், தோனிக்கு அடுத்தார் போல் சிறந்த விக்கெட் காப்பாளரை உருவாக்கும் முனைப்பில் ரிஷத் பந்த்துக்கு தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகள், இருபதுக்கு - 20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர் விருதிமான் சாஹா இருந்தபோதிலும் கூட ரிஷத் பந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருதுப்கு - 20 தொடரிலும் ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை, பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு துடுப்பெடுத்தாடவில்லை.

களத்தில் இறங்கி விளையாடும் ரிஷத் பந்த் நின்று விளையாடத் தவறுகிறார். இதனால், துடுப்பாட்டத்தில் திறமை இருந்தும் 25 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து செல்கிறார்.

அது மட்டுமல்லாமல் பங்களாதேஷுக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் ரிஷத் பந்த் விக்கெட் காப்ப்லும் பல தவறுகளைச் செய்தார். இதை ஏராளமான முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். ரிஷத் பந்த் விக்கெட் காப்பிலும், துடுப்பெடுத்தாட்டத்திலும் அதிகமான அளவு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ரிஷத் பந்த்துக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளதாவது,

களத்தில் செய்த தவறுகளை வைத்து ரிஷத் பந்த்தை யாரும் முடிவு செய்ய வேண்டாம், கணிக்கவும் வேண்டாம். அவரின் விருப்பத்துக்கு துடுப்பெடுத்தாடவும் விக்கெட் காப்பிலும் ஈடுபட அனுமதியுங்கள். 

அவர் மீது அதிகமான கவனத்தைக் குவிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ரிஷத் பந்த் பற்றி பேச்சு அதிகரித்து வருகிறது. நிச்சயம் இதுபோன்ற கவனக் குவிப்பு அவரின் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும்.

களத்தில் ரிஷத் பந்த் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச்செய்ய அவரை அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். களத்தில் இந்திய அணி விளையாடும்போது, ரிஷத் பந்த் என்ன செய்கிறார் என்று ஒவ்வொருவரும் அவரையே உற்று நோக்குவதை சிறிது காலத்துக்குத் தவிர்த்துவிடுங்கள்.

அச்சமில்லாத இளம் கிரிக்கெட் வீரர் ரிஷத் பந்த். அதனால்தான் அவருக்கு அணி நிர்வாகம் அதிகமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. அவர் சுதந்திரமாக இருக்க வேண்டும். ரிஷத் பந்த் மீதான கவனத்தை நாம் குறைத்துவிட்டால், அவரின் செயல்பாடுகளை உற்றுநோக்குவதைச் சிறிது காலத்துக்குத் தவிர்த்தால், நிச்சயம் அவரின் துடுப்பாட்டம், விக்கெட் காப்பில் முன்னேற்றம் இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41