தமிழ் மக்கள் தலை­நி­மிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உரு­வாக்­குவோம். ஜக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் போன்று நாம் தமிழ் மக்­களை ஏமாற்றப் போவ­தில்லை அவர்­களின் தேர்தல் விஞ்­ஞாப­னத்தில் கூட மூன்று மொழி­க­ளிலும் மூன்று வித­மாக விட­யங்­களை முன்­வைத்­துள்­ளனர் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ் தெரி­வித்­துள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ஸ­வுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் பிர­சாரக் கூட்டம்  நேற்று   பிற்­பகல்  கிளி­நொச்சி பசுமை பூங்­காவில் இடம்­பெற்­றது. இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்தில் 4000 ஆயிரம் மில்­லி­யன்­களை பெற்­றுள்­ளனர். ஆனால் என்ன செய்­தனர்?  கிளி­நொச்­சியில் எங்­க­ளு­டைய காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தியை விட சொல்­லு­ம­ள­வுக்கு எந்த அபி­வி­ருத்திப் பணி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு  தமிழ் மக்­களை ஏமாற்றி வரு­கி­றது.சஜித் ஏமாற்­று­கிறார்.இதற்குள் இணைந்­து­கொண்டு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் கூட்டு கள­வா­னி­க­ளாக உள்­ளனர்.

எதிர்­வரும் 18 ஆம் திகதி கோத்­த­பாய ராஜபக்ஸ் விமான ரிக்கட் பெற்­றுள்ளார் என பொய்­யான பரப்­பு­ரையை மேற்­கொண்­டுள்­ளனர். அவர் ஜனா­தி­பதி மாளி­கைக்கு செல்­வ­தற்­கான ரிக்­கட்­டையே பெற்­று­ளள்ளார். அவர் அமெ­ரிக்க பிரஜை என அமெ­ரிக்­கா­விலும், இல­ங­கை­யிலும் வழக்குத் தொடுத்­தனர் அவை அனைத்­திலும் தோல்­வியே கண்­டனர்  

நாம் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வந்தால்  எங்­க­ளுடை காலத்தில் போன்று அபி­வி­ருத்­தி­களை கொண்­டு­வ­ருவோம், முன்னாள் போரா­ளி­க­ளுக்கு  அரச வேலை­வாய்ப்பு, மாற்­று­வ­லு­வுள்­ளோர்கள் பெண்  தலை­மைத்­துவ குடும்­பங்கள் மேம்­பாடு, அத்­தோடு சிவில் பாது­காப்புத் திணைக்­களம் பலப்­ப­டுத்த்­ப­பட்டு வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும் விவ­சா­யி­க­ளுக்கு இல­வ­ச­மான உரம், உற்­பத்­தி­க­ளுக்கு சந்­தை­வாய்ப்பு போன்ற மக்­களின் அவ­சிய தேவைகள் நிறை­வேற்­றப்­படும்  

 இக் கூட்­டத்தில் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜ­பக்ஸ மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே  வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் தவராசா மற்றும் பெருமளவான பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.