பிரபாகரனின் தங்கம், வெளிநாட்டுப் பணம் குறித்து கடத்தலில் தப்பித்ததாகக் கூறப்படும்  நபர் தெரிவித்துள்ள தகவல்!

11 Nov, 2019 | 10:24 AM
image

(செ.தேன்­மொழி)

உள்­நாட்டு யுத்தம் முடி­வுற்­றதன் பின்னர் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் பிர­பா­க­ர­னுக்கு சொந்­த­மான பல சொத்­துக்­களை கொள்­ளை­யிட்­ட­தாக, வெள்ளை வேனில் கடத்திக் கொலை செய்ய முயற்­சிக்­கப்பட்­ட­தாக கூறப்­படும் முச்­சக்­கர வண்டி சார­தி­யான அத்­துல சஞ்­சீவ மத­நா­யக்க என்­பவர் தெரி­வித்தார்.

கிரு­ளப்­ப­னையில் அமைந்­துள்ள ஜன­நா­யக தேசிய அமைப்பு காரி­யா­ல­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை சுகா­தார அமை ச்சர் ராஜித சேனா­ரத்­னவின் தலை­மையில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. அந்த செய­்தி­யாளர் மாநாட் டில் கலந்­து­கொண்ட அத்­துல சஞ்­சீவ மத­நா­யக்க இந்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார்.

இவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

விடு­தலைப் புலி­களின் தலை­வ­ரான பிர­பா­க­ரனின் பெருந்­தொ­கை­யான சொத்­துக்­களை முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் கொள்­ளை­யிட்­டனர். முன்­னைய ஆட்­சியின் பாது­காப்பு அதி­கா­ரியின் ஆலோ­ச­னையின் பெய­ரிலே இந்த கொள்ளைத் திட்­டங்கள் செயற்­ப­டுத்­தப்­பட்­டன.

இவ்­வாறு பிர­பா­க­ர­னுக்கு சொந்­த­மான 80 இலட்சம் பெறு­ம­தி­யான யூரோக்­களும், 200 கிராம் தங்க கூறுகள் இரண்டும் நகை விற்­பனை நிலை­ய­மொன்றில் விற்­பனை செய்­வ­தற்­காக யாழில் இருந்து நப­ரொ­ரு­வரால் எடுத்­து­வ­ரப்­பட்­டன. இந்த விட­யத்தை அறிந்த அந்த விற்­பனை நிலை­யத்தின்  ஊழியர் ஒருவர்  எனக்குத் தெரி­வித்தார். இதனைக் கொள்­ளை­யிட்டால் எமக்கு பெருந்­தொ­கை­யான பணத்தை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றார். பின்னர் நான் அந்த பணத்­தையும், தங்­கத்­தையும் கொண்டு வந்த நப­ரி­ட­மி­ருந்து அவற்றை கொள்­ளை­யிட்டேன்.

இந்த விடயம் தொடர்பில் தெரி­ய­வந்­ததை அடுத்தே முன்­னைய அரசின் பாது­காப்பு அதி­காரி  என்னை கடத்­து­மாறு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.பின்னர் சிலர் என்னை கடத்திச் சென்று மறைத்து வைத்­தி­ருந்­தனர். அப்­போது அவர்கள் எனது புகைப்­ப­டத்தை காண்­பித்து 'நீதானே இது' என்று கேட்­டார்கள். பின்னர் தொலை­பே­சியில் ஒரு­வரை தொடர்புகொண்டு 'சேர் நீங்கள் கூறிய நபரை கடத்தி விட்டோம்' என்று தெரி­வித்­தார்கள்.

இதன்­போது அவர்கள் எனக்கு தேநீரும், தண்­ணீரும் பருகக் கொடுத்­தார்கள். நான் அவர்­க­ளிடம் இறு­தி­யாக ஒரு தடவை என் மனை­வி­யிடம் பேச அனு­மதி தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனு­மதி வழங்­கினர். நான் என் மனை­வியை தொடர்பு கொண்டு 'நான் மீண்டும் வரு­வேனா என்று சொல்ல முடி­யாது அதனால் நீ பிள்­ளை­க­ளுடன் கவ­ன­மாய் இரு' என்று கூறி­விட்டு அழைப்பைத் துண்­டித்து விட் டேன்.

மறுநாள் காலை மீண்டும் எனது முகத்தை மூடி வேறொரு இடத்­திற்கு அழைத்து வந்­தார்கள், பத்­த­ர­முல்லை பகு­திக்கே இவ்­வாறு என்னை அழைத்து வந்­தனர். அங்­குள்ள பெரிய மாளிகை ஒன்றில் நான் 17 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்டேன். பிறகு ஒருவர் வந்து நாங்கள் யார் என்று தெரி­யுமா? ஏன் உன்னை கடத்தி வைத்­துள்ளோம் என்று தெரி­யுமா என்று கேட்­டார்கள். குறித்த பாது­காப்பு அதி­காரி ஒருவர்  தானே என்னை கடத்தச் சொன்னார் என்று நான் கேட்டேன். ஆம் ஏன் கடத்த சொன்னார் என்று தெரி­யுமா? என்று அவர்கள் கேட்­டார்கள்.  பின் னர் நான் யாழில் இருந்து கொண்டு வரப்­பட்ட பணத்­தையும் நகை­யையும் கொள்­ளை­யிட்­ட­தி­னால்­தானே என்னைக் கடத்­தி­யுள்­ளீர்கள் என்று கேட்டேன். ஆம் அதற்­காக தான் கடத்­தி­யுள்ளோம். நாங்கள் யார் தெரி­யுமா? நாங்கள் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வினர். பயங்­கர வாத தடுப்பு சட்­டத்தின் கீழே நீ கைது செய்­யப்­பட்­டுள்ளாய் என்று கூறி­னார்கள்.

பின்னர் அவர்­க­ளுக்கு என்னை நீதி மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­துங்கள் என்று தெரி­வித்தேன்.  ஆனால் அவர்கள் என்னை அந்த மாளி­கையில் 17 நாட்கள் தடுத்து வைத்­தனர். இதன்­போது எனது மனைவி இந்த கொள்ளைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மற்­றை­ய­வர்­களும் சட்­ட­த­ர­ணியின் மூலம் மன்றில் ஆஜ­ரா­கி­யதை அடுத்து பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வினர் என்னை கொலை செய்­யாமல் தெமட்­ட­கொட குற்­றத்­த­டுப்பு பிரி­வி­ன­ரிடம் என்னை ஒப்­ப­டைத்­தனர்.

பின்னர் நான் சிறை­வைக்­கப்­பட்டு கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திக­தியே சரீர பிணையில் விடு­விக்­கப்­பட்டேன். இந்த விவ­காரம் தொடர்பில் எனக்கு தக­வலை வழங்­கி­யவர் நான் கடத்­தப்­பட்டேன் என்று தெரிந்­த­வுடன் இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்று விட்டார். கொள்ளைச் சம்­பவம் தொடர்பில் எனக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும். இந்த சொத்­துகள் தொடர்பில் தக­வல்கள் வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தினால் நான் துப்­பாக்கி மற்றும் கைக்­குண்­டு­க­ளுடன் கைதுசெய்யப்பட்டதாக ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டு அதில் முன்னாள் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இவ் வாறு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்தவர்கள் யாராவது வெறும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களா? இவர்கள் அந்த பணத்தை கொள்ளையிட்டு விட்டு அதனை மறைப்பதற்காகவே இவ் வாறான சூழ்ச்சியை செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17