கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோ­தரர். அவரை நான் பிழை­யாக பார்க்­க­வில்லை. இந்­நி­லை­மைக்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.

சம்­பூ­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற வைப­வத்தின் போது கடற்­படை அதி­கா­ரி­யொ­ரு­வரை திட்­டிப்­பே­சிய சம்­பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் கருத்து தெரிவிக்­கையில்,

சம்பூர் நிகழ்­வுக்கு முன்­பாக கிண்­ணி­யாவில் நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்ட நானும் முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் புறக்­க­ணிக்­கப்­பட்டோம். அதே­போன்­றுதான் சம்பூ­ரிலும் இடம்­பெற்­றது. ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றதாகும்.

கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது.

சம்­பூரில் நடை­பெற்ற குறித்த வைப­வத்­திற்கு கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் எஸ்.தண்­டா­யு­த­பாணி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்க உயர்ஸ்த்­தா­னிகர், படை அதி­கா­ரிகள் என பலரும் வருகை தந்­தி­ருந்­தனர். ஆனால் அந்த வைப­வத்­திற்கு முதல் ஒரு வைபவம் கிண்­ணி­யாவில் நடை­பெற்­றது. நான் அங்கும் சென்­றி­ருந்தேன். அந்த வைப­வத்தில் மேற்­படி பிர­மு­கர்­க­ளுடன் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்தும் கலந்து கொண்­டி­ருந்தார். அந்த வைப­வத்­திலும் நான் உட்­பட முன்னாள் முத­ல­மைச்சர் என இரு­வரும் புறக்­க­ணிக்­கப்­பட்டோம்.

கிண்­ணி­யாவில் நடை­பெற்ற அந்த வைப­வத்­திற்கு பின்னர் சம்­பூரில் பாட­சா­லை­யொன்றில் இந்த வைபவம் நடை­பெற்­றது.

அப்­போது அந்த வைப­வத்தில் கலந்து கொண்­டி­ருந்த நிலையில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாட­சாலை பைகளை வழங்­கு­வ­தற்­காக முத­லா­வது கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் அழைக்­கப்­பட்­டனர். மேடைக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுனர் என்­னையும் அழைத்தார். இவர்­க­ளி­ரு­வரின் பெயர்­களும் கௌர­வ­மாக அழைக்­கப்­பட்டு மேடைக்கு இவர்கள் போய் விட்­டனர்.

அப்­போது அவ்­வி­டத்­திற்கு போய் ஆளுனர் ஒரு சாத­ரண ஒரு­வரை கூப்­ப­டு­வது போன்று என்­னையும் அவ்­வி­டத்­திற்கு அழைத்தார். இதனை வெட்­கத்தை விட்டும் கூற­வேண்­டி­யுள்­ளது. ஒரு மாகா­ணத்தின் முத­ல­மைச்­சரை தரக் குறை­வாக அழைத்தார். பர­வா­யில்லை. அதனை நான் பொருட்­ப­டுத்­தாமல் சம்பூர் பிர­தேசம் கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் தண்­டா­யு­த­பா­ணியின் தொகுதி என்­பதால் அவ­ரையும் அழைத்துக் கொண்டு நான் முன்னே சென்று கொண்­டி­ருந்தேன். கல்­வி­ய­மைச்சர் பின்னால் வந்து கொண்­டி­ருந்தார். மேடைக்கு சென்­ற­போது அங்கு நின்ற கடற்­படை அதி­காரி எனது வயிற்றில் கையை வைத்து என்னை வர­வேண்டாம் என தடுத்தார். அது அவ­ரு­டைய பிழை­யில்லை. ஏனெனில் எனது பெயரை அங்கு அழைக்கவில்லை. அதனால் அவர் என்னை தடுத்­தி­ருக்­கலாம். அவரில் பிழை என கூற­மு­டி­யாது.

எனினும் என்னை அங்கு தடுத்த அந்த கடற்­படை அதி­கா­ரிக்கு இந்த கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற ரீதியில் மாகா­ணத்தின் மக்­களால் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட அதி­கா­ரத்­துக்­கு­ரிய அர­சியல் தலைவர் என்ற ரீதியில் அவ­ருக்கு ஒரு அறி­வுரை சொல்ல வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. அந்த அறி­வு­ரையே நான் அவ்­வி­டத்தில் செய்தேன்.

ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது. இந்­தப்­பி­ழைக்கு காரணம் கிழக்கு மாகாண ஆளு­ன­ராகும். அவர் அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­வ­தால்தான் இவ்­வா­றான சம்­பவம் இங்கு இடம்­பெற்­றது.

அதி­கா­ரத்தை ஆளுனர் வைத்­துக்­கொண்டு துஷ்­பி­ர­யோகம் செய்­வதால் வந்த விட­யமே இந்த சம்­ப­வ­மாகும். மாறாக கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோதரர். அவரை நான் இங்கு பிழையாக பார்க்கவில்லை. ஆனால் இவ்வளவுக்கும் காரணம் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமேயாகும்.

அவ்விடத்தில் யாராக இருந்தாலும் என்னுடைய சகோதரராக இருந்தாலும் நான் அந்த அறிவுரையை செய்தே இருப்பேன்.

படை அதிகாரிகளுடன் நாங்கள் ஒற்றுமையை பேணி நடந்து கொள்கின்றோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒற்றுமை இருக்கின்றது. படை அதிகாரிகளுடன் ஒற்றுமைப்பட்டு வேலை செய்கிறோம் என்றார்.